ஈரோடு, ஈங்கூர் இந்துஸ்தான் அறிவியல் மற்றும் வணிகவியல் கல்லூரி சார்பில் ஒரு நாள் ஆசிரியர் மேம்பாட்டு நிகழ்ச்சி நடைபெற்றது. கலாச்சார கல்வி மற்றும் பயிற்சி மையத்தின் இயக்குனர் திரு. செந்தில் குமார் அவர்கள் சிறப்பு விருந்தினராக கலந்துகொண்டு மதிப்பு கல்வி பற்றிய கருத்துக்களை விளக்கினார்.
இதில் பல்வேறு கல்லூரிகளில் இருந்து பேராசிரியர்கள் கலந்து கொண்டு பயன்பெற்றனர். கல்லூரியின் முதல்வர் முனைவர் முனைவர் ராமன் அவர்களின் வழிகாட்டலில் நிகழ்ச்சி ஏற்பாடுகளை பேராசிரியர்கள் மற்றும் மாணவர்கள் மேற்கொண்டனர்.