ஸ்ரீ வெங்கடேஸ்வரா கல்லூரியின் ஆடை வடிவமைப்பு துறைக்கும் நடுவண் அரசின் திறன் மேம்பாடு மற்றும் தொழில் முனைவோர் வளர்ச்சி அமைச்சகத்துக்கும் இடையே புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்திடப்பட்டது. இந்த ஒப்பந்தத்தில் ஆடை வடிவமைப்பு துறை மாணவ மாணவிகளுக்கு இலவச தொழில் பயிற்சி மற்றும் தொழில்துறை மேற்பார்வைக்கும் வேலைவாய்ப்பு ஏற்படுத்தி தருவது பற்றியும் குறிப்பிடப்பட்டிருந்தது. சிறப்பு விருந்தினர் அறிமுகம் மூன்றாம் ஆண்டு ஆடை வடிவமைப்பு துறை மாணவி J.சுவேதா அவர்களால் வழங்கப்பட்டது. சிறப்பு விருந்தினர் KS. சங்கரராகவன் திருப்பூர் இணை இயக்குநர் மற்றும் தலைவர் அவர்கள் கருத்தரங்கத்தில் ஆடை வடிவமைப்பு துறையின் வேலை வாய்ப்பு பற்றிய செய்திகளையும், சுயதொழில் தொடங்குவது பற்றியும், வேலைவாய்ப்புக்கான மேற்படிப்பு பற்றியும், அதிக வருமானம் முதல் அடிப்படை வருமானம் ஈட்டுவது குறித்தும், மென்பொருள் படிப்பு பற்றியும் தெளிவாகவும் சுவாரசியமாகவும் எடுத்துரைத்தார். நன்றியுரை இரண்டாம் ஆண்டு ஆடைவடிவமைப்பு துறை மாணவன் N. அமீர் முகமது அவர்களால் வழங்கப்பட்டது. இந்நிகழ்விற்கான ஏற்பாடுகளை ஆடைவடிவமைப்பு துறை தலைவி திருமதி T.ஷாலினி மற்றும் உதவி பேராசிரியர்கள் K.தேன்மொழி,P அனிதா R.அக்ஷயா, D.கௌசல்யா மற்றும் மாணவ மாணவிகளால் ஏற்பாடு செய்யப்பட்டது.
ஸ்ரீ வெங்கடேஸ்வரா கல்லூரியின் சார்பாக ஆடை வடிவமைப்பு துறையில் வேலைவாய்ப்புகள் என்ற தலைப்பில் கருத்தரங்கம்...
October 15, 2023
0
கவுந்தப்பாடி அருகே உள்ள ஒத்தக்குதிரை ஸ்ரீ வெங்கடேஸ்வரா கலை மற்றும் அறிவியல் கல்லூரியின் சார்பாக ஆடை வடிவமைப்பு துறையில் கல்லூரியின் முதல்வர் டாக்டர் A. மோகனசுந்தரம் ஐயா அவர்களின் அனுமதி பெற்று ஆடை வடிவமைப்பு துறையில் வேலைவாய்ப்புகள் என்ற தலைப்பில் கருத்தரங்கம் ஏற்பாடு செய்யப்பட்டது. இதில் ஆடை வடிவமைப்பு துறைத்தலைவி திருமதி T. ஷாலினி அவர்களால் வரவேற்புரை வழங்கப்பட்டது. கல்லூரியின் துணை முதல்வர் டாக்டர் சி. நஞ்சப்பா அவர்கள் ஆடை வடிவமைப்பு துறை பற்றிய முக்கியத்துவத்தையும் அதன் வேலை வாய்ப்பு பற்றியும் எடுத்துரைத்தார். கல்லூரியின் துணை முதல்வர் அவர்களால் சிறப்பு விருந்தினருக்கு சிறப்பு பரிசு வழங்கி சிறப்பு செய்யப்பட்டது.