Type Here to Get Search Results !

ஸ்ரீ வெங்கடேஸ்வரா கல்லூரியில் ISMEன் இயந்திரவியல் மற்றும் தானியங்கி துறை மாணவர்களின் உறுப்பினர் சேர்க்கைப் பதிவு தொடக்க விழா...

கவுந்தப்பாடி அருகில் உள்ள ஒத்தக்குதிரை ஸ்ரீ வெங்கடேஸ்வரா ஹை-டெக் பாலிடெக்னிக் கல்லூரியில் ISME (Indian Society of Mechanical Engineering) ன் இயந்திரவியல் மற்றும் தானியங்கி துறை மாணவர்களின் உறுப்பினர் சேர்க்கைப் பதிவு தொடக்க விழா நடைபெற்றது. 
இவ்விழாவில் சிறப்பு விருந்தினர்களாக ISMEன் தலைவர் முனைவர் K. ராஜேந்திரன் மற்றும் ISMEன் நிர்வாக குழு உறுப்பினரும் மகேந்திரா பொறியியல் கல்லூரியின் பேராசிரியருமான முனைவர் T. ஜேசுதாஸ் மற்றும் ISMEன் குழு உறுப்பினரும் MGR பல்கலைகழக பேராசிரியர் முனைவர் R.சுகந்தினி ரேகா ஆகியோர் கலந்து கொண்டனர். 
அப்போது அவர்கள் ISMEல் மாணவர்கள் உறுப்பினராவது பற்றியும் அதனால் வெளிநாடுகளில் மாணவர்களுக்கு கிடைக்கும் வேலைவாய்ப்பு பற்றியும் ISMEன் பத்திரிக்கை வெளியீடு பற்றியும் எடுத்து கூறினர் மற்றும் Unconventional Machining Process என்ற தலைப்பில் முனைவர் T. ஜேசுதாஸ் அவர்கள் விரிவுரை வழங்கினார்.  மேலும் மாணவர்கள் எப்போதும் நேர்மறை எண்ணங்களையே சிந்திக்க வேண்டும் என்றும் ஒரு பொருளை உருவாக்குவதில் கடவுளுக்கு அடுத்தபடியாக தொழில்நுட்ப கல்வி மாணவர்கள் தான் உள்ளனர் எனவும் கூறினார். இவ்விழாவில் கல்லூரியின் செயலர் திரு.K.C.கருப்பணன், தலைவர் திரு.P.வெங்கடாசலம்,  இணைச்செயலாளர் G.P.கெட்டிமுத்து,  முதன்மை செயல் அலுவலர் G.கௌதம்  துணை முதல்வர் திரு.P.மணி மற்றும் அனைத்து ஆசிரியர்களும் மாணவர்களும் கலந்து கொண்டனர். 
முன்னதாக விழாவிற்கு வந்த அனைவரையும் கல்லூரி முதல்வர் திரு. S.பிரகதீஸ்வரன் வரவேற்றுப் பேசினார். முடிவில் தானியங்கி துறைத்தலைவர் திரு. K.K. ஆறுமுகம் அவர்கள் நன்றி கூறினார்.

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.