ஈரோடு வடக்கு மாவட்ட கழகச் செயலாளர் என். நல்லசிவம் அவர்களின் முன்னிலையில், கழக துணை பொதுச் செயலாளர் மற்றும் நீலகிரி பாராளுமன்ற உறுப்பினர் ஆ. இராசா அவர்கள், புன்செய் புளியம்பட்டி நகரத்திலுள்ள நகர கழகச் செயலாளர் பி. ஏ. சிதம்பரம் அவர்கள் உடல் நலம் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருவதையறிந்து அவரது இல்லம் சென்று உடல் நலம் குறித்து விசாரித்தார்.
உடன் புன்செய் புளியம்பட்டி நகராட்சித் தலைவர் ஜனார்த்தனன், சத்தியமங்கலம் நகராட்சித் தலைவர் திருமதி. ஜானகி, பவானிசாகர் தெற்கு ஒன்றிய கழகச் செயலாளர் மற்றும் ஊராட்சி மன்ற தலைவர் N.காளியப்பன் மற்றும் மாவட்ட, ஒன்றிய, நகர, கிளை கழக நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.