கோபி நகரச் செயலாளரும் கோபி நகர மன்ற தலைவருமான என் ஆர் நாகராஜ் அவர்கள் போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவ மாணவியர்களுக்கும் பரிசுகளை வழங்கினார்.
மேலும் இந்நிகழ்ச்சியில், இந்திய தடகளப் போட்டியில் வெற்றி பெற்று தங்கம் வென்ற கோபி போக்குவரத்து தலைமை காவலர் திரு. சரவணக்குமார் அவர்களைப் பாராட்டி நினைவு பரிசு வழங்கப்பட்டது.
மேலும், கோபி காவல்துறையைச் சேர்ந்த காவலர் சதாசிவம், போக்குவரத்து காவலர் பாலமுருகன் ஆகியோருக்கு பரிசுகள் வழங்கப்பட்டது.
இந்த நிகழ்ச்சியை கோபி காவல் நிலைய உதவி ஆய்வாளர் சு.ஜெகநாதன் அவர்கள் சிறப்பான முறையில் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டார். அருகில் கலைக் கல்லூரியின் முதல்வர் தியாகராசு, கல்லூரி தாளாளர் தரணிதரன், ஆட்சி மன்ற துணைத் தலைவர் சண்முகசுந்தரம், இந்தியன் மெடிக்கல் அசோசியேஷன் சார்பாக டாக்டர். கௌரிசங்கர், அனைத்து வியாபாரிகள் சங்க தலைவர் வேலுமணி, திமுக மாவட்ட இளைஞரணி அமைப்பாளரும் நகராட்சி உறுப்பினருமான விஜய கருப்புசாமி மற்றும் மாணவ மாணவியர்கள் பலர் கலந்து கொண்டனர்.