Type Here to Get Search Results !

BE WELL மருத்துவமனையின் சார்பாக இலவச இருதய பரிசோதனை முகாம்...


உலக இருதய தினத்தை முன்னிட்டு   
பி வெல் (BE WELL) மருத்துவமனையின் சார்பில் நடைபெற்ற இருதய பரிசோதனை முகாமில் நூற்றுக்கணக்கான முதிர் வயதுடையோர் இலவச மருத்துவ பரிசோதனை செய்து கொண்டனர்.

மனித உடலில் மிக முக்கிய உறுப்புகளில் ஒன்றாக இதயம் உள்ளது. ஆண்டுதோறும் இருதய பாதிப்பு ஏற்பட்டு உயிரிழந்து வருவோர் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. இதயத்தில் கோளாறு ஏதேனும் ஏற்பட்டால் மொத்த உடல் இயக்கமும் பாதிப்புக்கு உள்ளாகும். இது குறித்த விழிப்புணர்வை உண்டாக்கும் விதமாக ஆண்டுதோறும் செப்டம்பர் 29 அன்று உலக இருதய தினம் கொண்டாடப்படுகிறது. 


அதன்படி (29.09.2024) இன்று, ஈரோடு பி வெல் (BE WELL)  மருத்துவமனையின் சார்பாக உலக இருதய தினத்தை ஒட்டி இலவச இருதய பரிசோதனை முகாம் நடைபெற்றது. இதில் உணவு உடற்பயிற்சி உறக்கம் போன்றவற்றின் முக்கியத்துவம் குறித்து பொது மருத்துவர் ஷியாம் லாட்சன் முதியோர்களுக்கு அறிவுரை வழங்கினார். 

அதைத்தொடர்ந்து இசிஜி, எக்கோ மற்றும் எக்ஸ்ரே இருதய மருத்துவ  ஆலோசனைகள் மருத்துவமனையின் தரப்பில் இலவசமாக பொதுமக்களுக்கு வழங்கப்பட்டது.


மருத்துவமனையின் மேலாளர் அருள் குமார் தலைமையில் நடைபெற்ற இந்த இலவச பரிசோதனை முகாம் ஏற்பாடுகளை ரியாஸ், வினோத் ஆகியோர் செய்திருந்தனர். மேலும் இம்முகாமில் கலந்து கொண்டவர்களுக்கு 50% சலுகை கட்டணத்துடன் டயாலிசிஸ் சிகிச்சை வழங்கப்பட்டது..

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.