ஈரோடு மாநகராட்சி 1வது மண்டலத்திற்கு உட்பட்ட 24 வது வட்டம் கிருஷ்ணம்பாளையம் காலனி பகுதியில் மாநகர மகளிர் மற்றும் மகளிர் தொண்டரணி சார்பில் தெருமுனை பிரச்சாரம் (29.09.2024) ஞாயிறு மாலை 5.30, மணியளவில் நடைபெற்றது.
நிகழ்ச்சியில், மாநகர செயலாளர் மு.சுப்பிரமணியம், மாவட்ட கழக பொருளாளர் 1வது மண்டலத் தலைவர் ப.க.பழனிச்சாமி, பகுதி கழக செயலாளர் வீ. சி. நடராஜன், மாநகர மகளிர் அணி அமைப்பாளர் கனிமொழி மற்றும் பகுதி கழக நிர்வாகிகள், மாமன்ற உறுப்பினர்கள், வார்டு கழக செயலாளர்கள், 24வது வட்ட கழக நிர்வாகிகள், தொண்டர்கள் மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டனர்.
மேலும், மாண்புமிகு துணை முதல்வராக பதவி ஏற்ற உதயநிதி ஸ்டாலின் மற்றும் அமைச்சர்கள் பதவியேற்பு விழாவை முன்னிட்டு பொதுமக்களுக்கு இனிப்புகள் வழங்கப்பட்டது.