தி.மு.க இளைஞர் அணி செயலாளரும், தமிழ்நாடு இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டு துறை அமைச்சருமான உதயநிதி ஸ்டாலின் அவர்கள் துணை முதல்வராக பொறுப்பேற்றதை கொண்டாடும் வகையில், ஈரோடு மாநகர திமுக சார்பில் பல்வேறு இடங்களில் பட்டாசு வெடித்து, பொது மக்களுக்கு இனிப்புகள் வழங்கி கொண்டாடினர்.
பெரியார் நகர் பகுதி கழகம் சார்பில் சூரம்பட்டி நான்கு சாலை சந்திப்பில் பெரியார் நகர் பகுதி செயலாளர் அக்னி சந்துரு தலைமையில் மாநகர செயலாளர் மு.சுப்பிரமணியம் அவர்கள் பொதுமக்களுக்கு இனிப்புகளை வழங்கினார். இதனையடுத்து, பெரியசேமூர் பகுதி கழகம் சார்பில் வீரப்பன்சத்திரம் பேருந்து நிறுத்தத்தில் துணை மேயர் வி.செல்வராசு தலைமையில் மாநகர செயலாளர் மு.சுப்பிரமணியம் இனிப்புகள் வழங்கினார். இந்த நிகழ்க்சியில் மண்டல தலைவர் சசிகுமார், மாமன்ற உறுப்பினர் ரேவதி திருநாவுக்கரசு, மாநகர துணை செயலாளர் விமல், நெசவாளர் அணி கோபால்சாமி, வட்ட செயலாளர் அன்பழகன், மாணவர் அணி மாநகர அமைப்பாளர் ஸ்ரீதர் மின்தொமுச சுந்தரராஜன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
மேலும், வீரப்பன் சத்திரம், கனி ராவுத்தர் குளம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் பட்டாசுகள் வெடித்தும், இனிப்புகள் வழங்கியும் தங்கள் மகிழ்ச்சியை தெரியப்படுத்தினர்.