கொடிகாத்த குமரன் அவர்கள் தனது 28-ம் அகவையில் பல்வேறு சுதந்திர போராட்டங்களில் கலந்து கொண்டு திருப்பூர் மாநகரில் நடைபெற்ற ஒரு சுதந்திர போராட்டத்தில் வெள்ளையர்களால் தாக்கப்பட்டதால் தான் ஏந்திய சுதந்திர கொடியினை கீழே விழாமல் தாங்கி பிடித்து தேசத்திற்காக இன்னுயிரை நீத்தார். அவருக்கு பெருமை சேர்க்கும் வகையில் திருப்பூர் மாநகரில் கொடிகாத்த குமரன் அவர்களுக்கு ஆண்டுதோறும் தமிழ்நாடு அரசின் சார்பில் விழா நடத்தப்பட்டு வருகிறது. மேலும், கொடிகாத்த குமரன் அவர்களின் பிறந்த இல்லம் அரசின் மூலம் பராமரிக்கப்பட்டு வருகிறது. அதனைத் தொடர்ந்து, இன்று (04.10.2024) மாவட்ட ஆட்சித்தலைவர் திரு.ராஜ கோபால் சுன்கரா இஆப., அவர்கள் கொடிகாத்த குமரன் அவர்களின் திருவுருவப்படத்திற்கு மாலை அணிவித்து, மலர் தூவி மரியாதை செலுத்தினார். மேலும், கொடிகாத்த குமரன் அவர்களின் வாரிசுதாரர்களுக்கு சால்வை அணிவித்து கௌரவித்தார்.
இவ்விழாவில் மாவட்ட ஊராட்சி குழு உறுப்பினர் எஸ்.ஆர்.எஸ்.செல்வம், சென்னிமலை பேரூராட்சி தலைவர் திருமதி.ஸ்ரீதேவி, சென்னிமலை ஊராட்சி ஒன்றிய பெருந்தலைவர் திருமதி.காயத்ரி இளங்கோ, செய்தி மக்கள் தொடர்பு அலுவலர் அ.சுகுமார், உதவி மக்கள் தொடர்பு அலுவலர் (செய்தி) திருமதி.செ.கலைமாமணி, சென்னிமலை பேரூராட்சி செயல் அலுவலர் க.மகேந்திரன் உட்பட வாரிசுதாரர்கள் மற்றும் உள்ளாட்சி அமைப்பு பிரதிநிதிகள், தொடர்புடைய துறை அலுவலர்கள் ஆகியோர் கலந்து கொண்டனர்.