Type Here to Get Search Results !

8 நடமாடும் கால்நடை மருத்துவ ஊர்திகளின் வழித்தட விவரங்கள் - கலெக்டர் தகவல்.

ஈரோடு மாவட்டத்தில் கால்நடை பராமரிப்புத்துறையில் 06.09.2024 மற்றும் 09.09.2024 அன்று மாண்புமிகு வீட்டுவசதி மற்றும் நகர்ப்புற மேம்பாட்டுத்துறை அமைச்சர் அவர்கள் மற்றும் மாண்புமிகு தமிழ் வளர்ச்சி மற்றும் செய்தித்துறை அமைச்சர் அவர்களால் பயன்பாட்டிற்கு கொண்டு வரப்பட்ட புதிய 8 நடமாடும் கால்நடை மருத்துவ ஊர்திகள் திங்கள்கிழமை முதல் சனிக்கிழமை வரை காலை 8 மணி முதல் பிற்பகல் 2 மணி வரை ஒதுக்கீடு செய்யப்பட்ட கீழ்க்கண்ட வழித்தடங்களில் செயல்படும் என மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து, மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் தெரிவித்துள்ளதாவது,
ஈரோடு கால்நடை பன்முக மருத்துவமனையினை (ஈரோடு தாலுக்கா) தலைமையிடமாக கொண்டு செயல்படும் நடமாடும் கால்நடை மருத்துவ ஊர்தி (TN 09 G 3200) - கூரப்பாளையம், காரைகிணறுதோட்டம், பச்சப்பாளி, சாணார்பாளையம், இராயபாளையம்புதூர், சொட்டையம்பாளையம், தண்ணீர்பந்தல்பாளையம், அய்யம்பாளையம், எல்லப்பாளையம் செம்மாம்பாளையம், நல்லியம்பாளையம் வெண்டிபாளையம், குப்பக்காடு ஆகிய கிராமங்களில் சிகிச்சை மேற்கொள்ளும்.

கரட்டாம்பாளையம் கால்நடை மருந்தகத்தினை (கொடுமுடி தாலுக்கா) தலைமையிடமாக கொண்டு செயல்படும் நடமாடும் கால்நடை மருத்துவ ஊர்தி (TN 09 G 3201)-கொல்லன்வலசு, சகாயபுரம், கொந்தளம்புதூர், கோட்டைபுதூர், சொட்டையூர், வள்ளியம்பாளையம், பெரமாம்பாளையம், அமராவதிபுதூர், பூலவலசு, வடிவுள்ளமங்கலம் இச்சிபாளையம், பெருமாள்கோவில்புதூர் ஆகிய கிராமங்களில் சிகிச்சை மேற்கொள்ளும்.

மொடக்குறிச்சி கால்நடை மருத்துவமனையினை (மொடக்குறிச்சி தாலுக்கா)
தலைமையிடமாக கொண்டு செயல்படும் நடமாடும் கால்நடை மருத்துவ ஊர்தி (TN 09 G 3202) கரியாக்கவுண்டன்வலசு, பூமாண்டவலசு, அஞ்சுராம்பாளையம்,
ஊஞ்சப்பாளையம் காங்கேயம்பாளையம், கள்ளகவுண்டன்பாளையம், குளூர்,
மன்னாதம்பாளையம் பூந்துறைசேமூர், மணியம்பாளையம், எலவநத்தம், புலவன்காடு ஆகிய கிராமங்களில் சிகிச்சை மேற்கொள்ளும்.

பெருந்துறை கால்நடை மருத்துவமனையினை (பெருந்துறை தாலுக்கா- பெருந்துறை, சென்னிமலை) தலைமையிடமாக கொண்டு செயல்படும் நடமாடும் கால்நடை மருத்துவ ஊர்தி (TN09 G 3204)- சீரங்கபாளையம், ஒரத்துப்பாளையம், கவுண்டச்சிபாளையம், சாணார்பாளையம், துடுப்பதி, இச்சிவலசு, சீலம்பட்டி, கோமையன்வலசு, அருள்மலை, பச்சாக்கவுண்டன்பாளையம், பூவம்பாளையம், மேற்கொள்ளும். பட்டக்காரன்பாளையம் ஆகிய கிராமங்களில் பொன்முடி, சிகிச்சை
தாளவாடி கால்நடை மருந்தகத்தினை (தாளவாடி தாலுக்கா) தலைமையிடமாக கொண்டு செயல்படும் நடமாடும் கால்நடை மருத்துவ ஊர்தி TN 09 G 3210-இக்கலூர், சிக்கள்ளி, அருள்வாடி, கல்மண்டிபுரம் கெட்டவாடி, மல்லையன்புரம், கோடிபுரம், முதியனூர், கோட்டமாளம், சுஜில்கரை, குழியாடா, பேடர்பாளையம் ஆகிய கிராமங்களில் சிகிச்சை மேற்கொள்ளும்.

கோபிசெட்டிபாளையம் கால்நடை பன்முக மருத்துவமனையினை (கோபி தாலுக்கா) தலைமையிடமாக கொண்டு செயல்படும் நடமாடும் கால்நடை மருத்துவ ஊர்தி TN 09 G 3211- சந்திராபுரம், சில்லாமடை, ஒடையாகவுண்டன்பாளையம், மோதூர், ஓலப்பாளையம் நாமக்கல்பாளையம், புதுக்கரைபுதூர், S.கணபதிபாளையம், நஞ்சை புளியம்பட்டி, அண்ணாநகர், மேவானி, வரப்பள்ளம் ஆகிய கிராமங்களில் சிகிச்சை மேற்கொள்ளும் பவானி, கால்நடை மருத்துவமனையினை (பவானி தாலுக்கா) தலைமையிடமாக கொண்டு செயல்படும் நடமாடும் கால்நடை மருத்துவ ஊர்தி TN 09 G 3217 சங்கரகவுண்டன்பாளையம், சன்னியாசிப்பட்டி, பிச்சானூர், துருசம்பாளையம், நாரபாளையம், பெருமாபாளையம், பூனாச்சி, குண்டுசட்டிபாளையம், வைரமங்கலம், ஆனந்தம்பாளையம் எட்டிக்குட்டை, பாப்பாங்காட்டூர், ரங்கன்காட்டூர், அய்யம்பாளையம் ஆகிய கிராமங்களில் சிகிச்சை மேற்கொள்ளும்.

அந்தியூர் கால்நடை மருந்தகத்தினை (அந்தியூர் தாலுக்கா) தலைமையிடமாக கொண்டு செயல்படும் நடமாடும் கால்நடை மருத்துவ ஊர்தி TN 09 G 3222- செங்குளம், அலசபன்னட்டி, அக்னிபாவி, தாளக்கரை, தொள்ளி, கொங்காடை, மாக்கல்லூர் தோப்புக்காட்டூர், மைக்கேல்பாளையம், பொய்யாங்குட்டை, சென்றாயனூர், நகலூர், புதூர், G.G.நகர், கள்ளியங்காடு. SPகவுண்டனூர் ஆகிய கிராமங்களில் சிகிச்சை மேற்கொள்ளும்.

மேற்கண்ட வழித்தடங்களில் உள்ள பொதுமக்கள் மற்றும் கால்நடை வளர்ப்போர் இந்த வாய்ப்பினை பயன்படுத்தி தங்கள் கால்நடைகளுக்கு சிகிச்சை பெற்றுக்கொள்ளவும், மேலும் கால்நடைகளுக்கு அவசர சிகிச்சை பெற 1962 என்ற கட்டணமில்லா தொலைபேசி எண்ணிற்கு தொடர்பு கொள்ளலாம் என மாவட்ட ஆட்சித்தலைவர் ராஜ கோபால் சுன்கரா அவர்கள் தெரிவித்துள்ளார்.

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.