‘உங்களைத் தேடி உங்கள் ஊரில்” திட்டத்தின் கீழ், 2-வது நாளாக, இன்று (17.10.2024) மாவட்ட ஆட்சித்தலைவர் ராஜ கோபால் சுன்கரா அவர்கள் நம்பியுர் வட்டத்திற்குட்பட்ட பல்வேறு பகுதிகளுக்கு நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.
‘உங்களைத் தேடி உங்கள் ஊரில்” திட்டத்தின் கீழ், மாவட்ட ஆட்சித்தலைவர; அவர்கள் நேற்று (16.10.2024) நம்பியுர் வட்டாட்சியர் அலுவலகம், நம்பியுர் காவல் நிலையம், தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கம், எலத்தூர் செட்டிபாளையம் ஆரம்ப சுகாதார நிலையம், அங்கன்வாடி மையம், மேல்நிலைப்பள்ளிகள் உள்ளிட்ட பல்வேறு இடங்களில் ஆய்வு மேற்கொண்டார். மேலும், அனைத்துத் துறைசார்ந்த அலுவலர்களுடன் ஆய்வு மேற்கொண்டு, பொதுமக்களிடம் கோரிக்கை மனுக்களை பெற்று கொண்டார்.
அதனைத் தொடர்ந்து, இரண்டாம் நாளான இன்றைய தினம் (17.10.2024) மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள், நம்பியுர் வட்டத்திற்குட்பட்ட வெட்டையம்பாளையம் பால் உற்பத்தியாளர்கள் கூட்டுறவு சங்கத்தினையும், அங்கு அமைக்கப்பட்டிருக்கும் குளிரூட்டும் நிலையத்தினையும் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டு பால் உற்பத்தியாளர்களுடன் கலந்துரையாடினார்.