வடகிழக்கு பருவ மழையையொட்டி மாவட்ட நிர்வாகம் சார்பில் 1000 சிறப்பு மருத்துவ முகாம் நடைபெற ஈரோடு மாவட்ட ஆட்சித் தலைவர் ராஜகோபால் சுன்கரா ஆலோசனை வழங்கினார்.
அதன் பேரில் ஈரோடு மாநகராட்சி பி.பெ.அக்ரஹாரம் நகர்ப்புற ஆரம்ப சுகாதார நிலையத்தின் சார்பில் வீரப்பன் சத்திரம் காவேரி ரோடு சின்ன மாரியம்மன் கோவில் அருகே சிறப்பு மருத்துவ முகாம் நடைபெற்றது. இந்த முகாமில் பொதுமக்கள் சுமார் 120 நபர்கள் கலந்து கொண்டு பயனடைந்தனர்.
இந்த முகாமினை பி.பெ.அக்ரஹாரம் நகர்ப்புற ஆரம்ப சுகாதார நிலையத்தின் மருத்துவ அலுவலர் மரு.கார்த்தீபன் தலைமையில், மரு.யாமினி மற்றும் மருத்துவ குழுவினர் மற்றும் சுகாதார ஆய்வாளர்கள் வினோத், பாலமுருகன் மற்றும் செவிலியர்கள் பங்கேற்றனர்.
இதில் ரத்த அழுத்தம் மற்றும் சர்க்கரை நோய் பரிசோதனை செய்யப்பட்டு மருத்துவ ஆலோசனை, இலவசமாக மாத்திரைகள வழங்கப்பட்டது. ஈரோடு மாநகராட்சி மாமன்ற உறுப்பினர். மல்லிகா நடராஜன் வீரப்பன் சத்திரம் பகுதி திமுக செயலாளர் வி. சி. நடராஜன் ஆகியோர் கலந்து கொண்டனர்.