புரட்டாசி மாத நான்காவது சனிக்கிழமையை முன்னிட்டு, அனைத்து வைணவத் தலங்களிலும் பெருமாளுக்கு சிறப்பு விசேஷ பூஜைகள் நடைபெற்று வருகின்றன. அந்த வகையில் நேற்று , ஈரோடு கஸ்தூரி அரங்கநாதர் திருக்கோவிலில் பெருமாளுக்கு திருமஞ்சனம், விசேஷ பூஜைகள் மற்றும் அலங்கார வழிபாடுகள் நடைபெற்றன.
இதில் அதிகாலை முதலே திரளான பக்தர்கள் கோவிலுக்கு வந்து சாமி தரிசனம் செய்தனர். தொடர்ந்து, கோவில் நிர்வாகம் சார்பில் பக்தர்களுக்கு பொங்கல், சுண்டல் உள்ளிட்ட பிரசாதங்கள் வழங்கப்பட்டது.
பொதுவாக, ஈரோடு கஸ்தூரி அரங்கநாதர் பெருமாள் கோவிலில் புரட்டாசி மாதங்களில் பக்தர்கள் பெருமளவில் வருகை தருவது வழக்கம். நேற்று மற்ற சனிக்கிழமைகளைக் காட்டிலும் புரட்டாசி நான்காவது சனிக்கிழமை என்பதால் பக்தர்கள் வருகை வழக்கத்தை விட அதிகரித்து காணப்பட்டது.
முன்னதாக, தேர் திருவிழாவில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு தேரை வடம் பிடித்து இழுத்தனர். மணிக்கூண்டு, பிரப் சாலை வழியாக சென்ற தேரை மேயர் நாகரத்தினம் சுப்பிரமணியம், துணைமயர் செல்வராஜ், அறங்காவலர் குழு தலைவர் சிவக்குமார்,
முன்னாள் தலைவர் செல்வம், முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் தென்னரசு, நந்தகுமார், செயல் அலுவலர்கள் தா. ஜெயலதா சுகுமார், கர்சிப் சுப்பிரமணியம், சுந்தர்ராஜன், முன்னாள் கவுன்சிலர்கள் பாலசுந்தரம், விஜயபாஸ்கர், கவுன்சிலர் புவனேஸ்வரி பாலசுந்தரம் மற்றும் திரளான பக்தர்கள் வடம்பிடித்து இழுத்து சென்றனர்.