Type Here to Get Search Results !

பணியின்போது வீரமரணம் அடைந்த காவலர்களின் நினைவாக மலர் வளையம் வைத்து மரியாதை...


ஈரோடு மாவட்ட ஆயுதப்படை மைதானத்தில் நேற்று (21.10.2024) காவலர் வீரவணக்க நாளை முன்னிட்டு, பணியின்போது வீரமரணம் அடைந்த காவலர்களின் நினைவாக அமைக்கப்பட்டுள்ள நினைவு சின்னத்தில் மாவட்ட ஆட்சித்தலைவர் ராஜ கோபால் சுன்கரா  அவர்கள் மலர் வளையம் வைத்து, மரியாதை செலுத்தினார்.


பணியின்போது, வீரமரணம் அடைந்த காவலர்களை நினைவு கூர்ந்து அவர்களின் தியாகத்தை போற்றும் விதமாக ஆண்டுதோறும் அக்டோபர் 21 அன்று காவலர் வீரவணக்க நாள் கடைபிடிக்கப்பட்டு வருகிறது.

1959-ம் ஆண்டு, இதே நாளில் லடாக் பகுதியில் Hot Springs என்ற இடத்தில் சீன இராணவத்தினர் ஒளிந்திருந்து மேற்கொண்ட திடீர் தாக்குதலில், 10 மத்திய பாதுகாப்பு படைக் காவலர்கள் (CRPF) உயிரிழந்தனர். கடல் மட்டத்திலிருந்து, 16,000 அடி உயரத்தில், அன்று வீர மரணமடைந்த காவலர்களின் தியாகத்தை, கடல் அலைகள் கண்ணுக்குத் தெரியும் இவ்விடத்தில் இருந்து நாம் இன்று நினைவு கூறுகிறோம். கடற்கரையானாலும் பனிமலைச் சிகரமானாலும், காவலர் பணி, இடர் நிறைந்தது. உனது வருங்காலத்திற்கு எனது தற்காலத்தை ஈந்தேன். நாளைய உன் விடியலுக்கு இன்று நான் மடியத் தயார் என்று கூறி இவ்வாண்டு இந்தியாவின் பல்வேறு பகுதிகளில் நம்மை விட்டுப்பிரிந்த காவலர்களுக்கு மரியாதை செலுத்தப்படுகிறது. மடிந்து உயிர்தியாகம் செய்த காவலர்கள் விட்டுச் சென்ற பணிகளைச் செய்து முடிப்போம் என்று உறுதி பூண்டு, அவர்களின் வீரத் தியாகம் வீண்போகாது என்று இந்த காவலர் வீரவணக்க நாளில் உறுதிமொழி ஏற்கப்பட்டது.


இந்நிகழ்ச்சியில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஜவகர், கூடுதல் காவல் கண்காணிப்பாளர்கள் எம்.விவேகானந்தன் (தலைமையிடம்), சி.வேலுமணி (சைபர் குற்றப்பிரிவு) உட்பட காவலர்கள் மற்றும் பணியாளர்கள் கலந்து கொண்டனர்.

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.