ஈரோடு தாலுகா அலுவலகத்தில் தமிழ்நாடு கிராம நிர்வாக அலுவலர்கள் சங்கம் மற்றும் தமிழ்நாடு கிராம நிர்வாக அலுவலர்கள் முன்னேற்ற சங்கம் சார்பில் நேற்று மாலை ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
இந்த ஆர்ப்பாட்டத்துக்கு கிராம நிர்வாக அலுவலர்கள் சங்க ஈரோடு வட்ட தலைவர் பழனிவேல் தலைமை தாங்கினார். பொருளாளர் கார்த்திகேயன், மாநில பொறுப்பாளர் சுரேஷ், மாவட்ட செயலாளர் ஜான் ஆகியோர் கலந்துகொண்டு பேசினர்.
இதில் நாமக்கல் மாவட்டம் நாவலூர் கிராம நிர்வாக அலுவலர் ராமனை தாக்கிய நபரை கைது செய்ய வேண்டும் என்ற கோரிக்கையை வலியுறுத்தி கோஷங்கள் எழுப்பப்பட்டன. இதில் கிராம நிர்வாக அலுவலர்கள் பலர் கலந்துகொண்டனர்.