சிதம்பரம் நடராஜர் கோயிலில் வருடத்தில் ஆறு முறை சதூர்த்தசி மகா அபிஷேகம் நடைபெறும். அந்த வகையில் நேற்று சிதம்பரத்தில் புரட்டாசி சதூர்த்தசி மகா அபிஷேகம் நடைபெற்றது.
இதையொட்டி ஈரோடு மாவட்டம் கோபிசெட்டிபாளையம் பாரியூர் வெள்ளாள பாளையத்தில் உள்ள சிவாக்கர யோகி திருஞானசம்பந்தர் திருமடத்தில் அருள்மிகு சிவகாமி அம்மை உடனுறை ஸ்ரீமத் ஆனந்த நடராஜப் பெருமான் திருக்கோயிலில் புரட்டாசி சதூர்த்தசி மகா அபிஷேகம் மற்றும் திருக்கயிலாய பரம்பரை, ஸ்ரீ கந்தப்பரம்பரை சூரியனார் கோயில் ஆதீன ஸ்ரீ கார்யம் அருட்குருநாதர் தவத்திரு ஸ்ரீமத் சிவாக்கர தேசிக சுவாமிகளின் திருமுறை அருளாசியுரை நேற்று நடைபெற்றது.
நிகழ்ச்சியில், ஸ்ரீமத் சிவாக்கர தேசிக சுவாமிகள் பக்தர்களிடையே பேசுகையில்
உலக மக்கள் அனைவரும் ஒற்றுமையாக வாழ வேண்டும்,
சகல தோஷங்கள் நீங்க நடராஜப் பெருமானை வழிபாடு செய்ய வேண்டும், தம்பதிகள் ஒருவருக்கு ஒருவர் விட்டு கொடுத்து வாழ்ந்தல் அதுவே பேரின்பம், குழந்தை பேருக்கு வாரம் ஒரு முறையாவது ஏழைகளுக்கு அன்னதானம் செய்ய வேண்டும், தர்ம காரியங்கள் தொடர்ந்து செய்தாலே சனி பகவான் தொந்தரவு இருக்காது, என சுவாமிகள் அருளாசியுரை செய்தார். தொடர்ந்து பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.