ஈரோடு மாவட்டம், ஈரோடு வருவாய் கோட்டாட்சியர் அலுவலகத்தில் (18.10.2024) மாவட்ட ஆட்சித்தலைவர் ராஜ கோபால் சுன்கரா அவர்கள் பராமரிக்கப்பட்டு வரும் பதிவேடுகளை நேரில் சென்று, பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.
இந்த ஆய்வில் தன்பதிவேடு, முன்கொணர் தன்பதிவேடு, சிறப்பு பணிகள் தொடர்பான பதிவேடுகள், நீண்ட கால நிலுவையில் உள்ள அலுவலக கோப்புகள், பணியாளர் வருகை பதிவேடு, தற்செயல்விடுப்பு பதிவேடு, முதியோர் பாதுகாப்பு சட்டம் குறித்த கோப்புகள், இணையதள பதிவுகள் குறித்த பதிவேடு உள்ளிட்ட முக்கிய அலுவலக நடைமுறை கோப்புகள் மற்றும் பதிவேடுகளை பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.