சுதந்திரப் போராட்ட வீரர் கொடிகாத்த தியாகி திருப்பூர் குமரன் அவர்களின் 121 வது பிறந்தநாள் விழாவை முன்னிட்டு இன்று (04.10.2024) வெள்ளிக்கிழமை காலை 10 மணியளவில்
சிவகிரி, அண்ணா மேடை அருகில் உள்ள தியாகி திருப்பூர் குமரனின் முழு உருவ சிலைக்கு மொடக்குறிச்சி சட்டமன்ற உறுப்பினர் டாக்டர் சி. சரஸ்வதி அவர்கள் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.
நிகழ்வில் பாரதிய ஜனதா கட்சியின் கொடுமுடி மேற்கு ஒன்றிய நிர்வாகிகள் உடனிருந்தனர்.