மரணமடைந்த தொழிலாளி மேசன், எலக்ட்ரிஷியன், கட்டுமான சித்தாள் போன்ற ஏதேனும் ஒரு அமைப்புசாரா கட்டுமானம் சார்ந்த வேலை செய்பவராக இருத்தல் வேண்டும். மரணமடைந்த தொழிலாளியின் இணையவழி விண்ணப்பங்களின் அடிப்படையில் உரிய ஆவணங்கள் பரிசீலனை செய்யப்பட்டு, தொழிலாளர் ஆணையர் அவர்களால் ஒப்பளிப்பு செய்யப்பட்டு தமிழ்நாடு கட்டுமானத் தொழிலாளர்கள் நலவாரியத்திலிருந்து ரூ.5.00 இலட்சம் நிதியுதவி நியமனதாரர்/வாரிசுதாரர்களின் வங்கியில் நேரடியாக (ECS) வழங்கப்படும். இத்திட்டத்தின்கீழ் ஈரோடு மாவட்டத்தில் இதுவரை கட்டுமானப் பணியிடத்து விபத்து மரணத்தினால் பாதிக்கப்பட்ட 24 குடும்பங்களுக்கு ரூ.1.20 கோடி நிதியுதவி வழங்கப்பட்டுள்ளது, என ஈரோடு மாவட்ட ஆட்சித்தலைவர் ராஜ கோபால் சுன்கரா அவர்கள் தகவல்.
அதன்படி, எனக்கு ரூ.5.00 இலட்சத்திற்கான நிதியுதவி ஒதுக்கீடு செய்யப்பட்டு, ஈரோடு மாவட்டத்தில் நடைபெற்ற விழாவில் தமிழ்நாடு அரசால் வழங்கப்பட்டது. இந்த தொகை, எனது மூத்த மகளின் வாழ்வாதாரத்திற்கும், இளைய மகளின் கல்வி செலவிற்கும் எங்களது குடும்பத்தின் அன்றாட தேவைகளுக்கும் மிகுந்த பயனுள்ளதாக இருந்து வருகிறது. மேலும், எனது இளைய மகளின் எதிர்காலத் தேவைகள் மற்றும் அவரின் உயர்கல்வி படிப்பிற்கும் இந்த தொகை பெரும் உதவியாக இருக்கின்றது. இந்த நலத்திட்ட உதவியினை வழங்கி என்னை போன்ற ஏழ்மை நிலையில் உள்ளோரின் வாழ்வை மேம்படுத்தி வரும் மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களுக்கு எனது நன்றியினை தெரிவித்துக் கொள்கிறேன் என தெரிவித்தார்.