மாவட்ட ஆட்சித்தலைவர் ராஜ கோபால் சுன்கரா அவர்களின் வழிகாட்டுதலின்படி, தமிழ்நாடு அரசு ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை மற்றும் தமிழ்நாடு திறன் மேம்பாட்டுக் கழகம் இணைந்து பழங்குடியினர் ஆய்வு மையம் மூலம் ஈரோடு மாவட்டத்தில் வசிக்கும் பழங்குடியினர்களுக்கு வேலைவாய்ப்பு திறன் வழிகாட்டுதல் நிகழ்வு, பழங்குடியினர் நலத்துறை இயக்குநர் எஸ்.அண்ணாதுரை C.L.S. அவர்களின் தலைமையில் சத்தியமங்கலத்தில் உள்ள பண்ணாரி அம்மன் தொழில்நுட்ப கல்லூரியில் நடைபெற்றது.
10th, 12th, ITI, DIP, UG, PG Degree முடித்த சுமார் 95 சோழகா, ஊராளி போன்ற பழங்குடியினத்தை சேர்ந்த மாணவர்/ மாணவியர்கள் மற்றும் அரசுசாரா தனியார் தொண்டு நிறுவனங்கள் மூலம் விழிப்புணர்வு ஏற்படுத்தியதின் பேரில் மாணவர்கள் பங்கேற்றனர். மேலும் இந்நிகழ்ச்சியில் பங்கேற்ற 25 மாணவிகள் நீலகிரி மாவட்டம் கோத்தகிரியில் அமைந்துள்ள சென்னை கிறிஸ்த்துவ கல்லூரியின் சார்பில் அமைக்கப்பட்டுள்ள சமூதாய கல்லூரியில் செவிலியர் உதவியாளர் படிப்பில் சேர்வதற்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.
ஈரோடு மாவட்டத்தில் படித்த பழங்குடியினர் இளைஞர்களுக்கு வழிகாட்டுதல் நிகழ்ச்சியின் மூலம் முன்னனி நிறுவனங்களில் தங்கும் மற்றும் உணவு வசதியுடன் திறன் பயிற்ச்சி அளிக்கப்பட்டு, பழங்குடியினர் இளைஞர்களுக்கு இந்திய மற்றும் பன்னாட்டு தொழில் நிறுவனங்களில் பணியமர்த்தப்படவுள்ளார்கள். இதன் மூலம் பழங்குடியினர் இளைஞர்களின் பொருளாதாரம் தன்னிறைவு அடைந்து, இவர்கள் மற்ற பழங்குடியின இளைஞர்களுக்கு முன்மாதிரியாக திகழ்வார்கள்.
பழங்குடியினருக்கான இம்முகாமில் மாவட்ட ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் அலுவலர் வே.இராஜகோபால், பழங்குடியினர் ஆய்வு மைய இயக்குநர் முனைவர்.ச.உதயகுமார், திட்ட மேலாளர் பொன்வைத்தியநாதன் உட்பட தனியார் தொண்டு நிறுவனங்களை சேர்ந்த பிரதிநிதிகள், சமுதாய தலைவர்கள் மற்றும் வேலைவாய்ப்பு வழங்கும் தனியார் தொழில் நிறுவனங்களின் பிரதிநிதிகளும் கலந்து கொண்டனர்.