Type Here to Get Search Results !

ரூ.733.02 கோடி மதிப்பில் 11,935 மகளிர் சுய உதவி குழுவினர் பயனடைந்துள்ளனர் - கலெக்டர் தகவல்.


ஈரோடு மாவட்டம் தமிழ்நாடு மாநில ஊரக மற்றும் நகர்புர வாழ்வாதார இயக்கம் சார்பில் ரூ.733.02 கோடி மதிப்பில் 11,935 மகளிர் சுய உதவி குழுவினர் பயனடைந்துள்ளனர். மாவட்ட ஆட்சித்தலைவர் ராஜ கோபால் சுன்கரா அவர்கள் தகவல்.

தமிழ்நாடு மகளிர் மேம்பாட்டு நிறுவனம் மகளிருக்கு அதிகாரமளிப்பதற்கான முன்னோடி நிறுவனங்களில் ஒன்றாக செயல்பட்டு வருகிறது. மகளிரின் சமூக மற்றும் பொருளாதார நிலையை மேம்பாடு அடையச் செய்வதே இதன் நோக்கமாகும். ஈரோடு மாவட்டத்தில் தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார இயக்கத்தின் கீழ் 8,670 மகளிர் சுய உதவிக்குழுக்களில் 93,358 மகளிர் உறுப்பினராகவும் மற்றும் தமிழ்நாடு மாநில நகர்புர வாழ்வாதார இயக்கத்தின் கீழ் 6,105 சுய உதவிக்குழுக்களில் 71,062 மகளிர் உறுப்பினராகவும் மொத்தம் 14,775 மகளிர் சுய உதவிக்குழுக்களில் 1,64,420 உறுப்பினர்கள் இணைத்து பயன்பெறுகின்றனர்.


2023-24 ஆம் ஆண்டு ஊரகப்பகுதிகளில் 338 சுய உதவிக் குழுக்களுக்கு ஆதாரநிதியாக தலா ரூ.15,000/- வீதம், ரூ.50.70 இலட்சம் மற்றும் நகர்புர பகுதிகளில் 601 மகளிர் சுய உதவிக்குழுக்களுக்கு ஆதாரநிதியாக தலா ரூ.10,000/- வீதம் ரூ.60.10 இலட்சம் வழங்கப்பட்டுள்ளது. மேலும், ஊரகப்பகுதிகளில் உள்ள மகளிர் சுய உதவிக் குழுக்களுக்கு சமுதாய முதலீட்டு நிதியாக ரூ.1,50,000/- வீதம் 136 குழுக்களுக்கு ரூ.2.04 கோடியும், வங்கி கடனுதவியாக ஊரகப்பகுதிகளில் 6,751 குழுக்களுக்கு ரூ.399.17 கோடியும், நகர்புர பகுதிகளில் உள்ள 4,109 மகளிர் சுய உதவிக்குழுக்களுக்கு ரூ.272.55 கோடியும் வழங்கப்பட்டுள்ளது.

மேலும், 2023-24 ஆம் ஆண்டில் ஊரகப்பகுதிகளில் 193 இளைஞர்களுக்கும், 300 இளைஞர்களுக்கு இளைஞர் திறன் வளர்ப்பு பயிற்சி வழங்க இலக்கு நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.

தமிழ்நாடு நகர்புற வாழ்வாதார இயக்கம் சார்பில் ஈரோடு மாவட்டம், அரியப்பம்பாளையம் பேரூராட்சியில் செயல்படும் மகளிர் சுய உதவிக்குழுவினர் நிறைந்த மனதுடன் தெரிவித்தாவது,

அரியப்பம்பாளையம் பேரூராட்சிப் பகுதியில் 10 மகளிர் சுய உதவிக்குழுக்கள் இணைந்து மகளிர் பகுதியளவிலான கூட்டமைப்பு செயல்பட்டு வருகிறது. இக்கூட்டமைப்பில் இணைந்துள்ள மகளிர் குழுக்களை சார்ந்த பெண்களை முன்னேற்றவேண்டும் என்ற எண்ணத்தில் அவரவர்க்கு விருப்பமான தொழிலை செய்ய ஊக்கப்படுத்தப்பட்டு, ஓவ்வொரு தொழில் செய்யும் பெண்களுக்கு உள்கடன் குறைந்த வட்டியில் வழங்கப்பட்டு வருகிறது. மேலும், சுகாதாரத்தின் முக்கியத் துவத்தை வலியுறுத்தி பேரணிகள் நடத்தப்பட்டு, மருத்துவ விழிப்புணர்வாக பெண்களுக்கு ஏற்படும் மார்பக புற்றுநோய் மற்றும் கர்ப்பை புற்றுநோய் போன்ற பெண்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது. இல்லத்தரசிகளாக மட்டுமே இருந்த நாங்கள் தற்போது தொழில் முனைவோராக மாறி இன்று எங்களையும் எங்களது பகுதியில் உள்ள பெண்களை முன்னேற்றும் அளவில் உயர்ந்துள்ளோம். மேலும், நாங்கள் சுயமாக தொழில்செய்து எங்களது குடும்பத்தை மட்டுமல்லாது, எங்களது பகுதியில் உள்ள பெண்களையும் முன்னேற்றியுள்ளோம். மேலும், சமூகப்பிரச்சனைகளையும் தீர்த்துவைத்துள்ளோம் என்பதை எண்ணும்போது நாங்கள் பெருமிதம் கொள்கின்றோம்.

மேலும், அரியப்பம்பாளையம் கூட்டமைப்பை பாராட்டி தமிழ்நாடு அரசு மணிமேகலை விருது-2023-24ஆம் ஆண்டுக்கான சிறந்த பகுதியளவிலான கூட்டமைப்பு என்ற விருதை வழங்கியுள்ளது. சமூக ஒற்றுமையுடன் இருக்க எங்களை ஊக்கப்படுத்தி வழிநடத்தும், தமிழ்நாடு நகர்புற வாழ்வாதார இயக்கம் மற்றும் மகளிர் திட்டத்திற்கும், மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களுக்கும் நிறைந்த மனதுடன் எங்களது நன்றியை தெரிவித்து கொள்கிறோம், என தெரிவித்துள்ளனர்.





Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.