Type Here to Get Search Results !

மொடக்குறிச்சி MLA -விடம் பொதுமக்கள் சார்பாக வேண்டுகோள்.....

கடந்த 21.11.2024 அன்று நடைபெற்ற பொது நிகழ்ச்சியில் கலந்து கொண்ட மொடக்குறிச்சி MLA அவர்களிடம் பொதுமக்கள் சார்பாக பொதுநலன் மனு அளிக்கப்பட்டது.

இந்நிகழ்ச்சி தொடர்பான செய்திகள் சமூகவலைத்தளங்களில் புகைப்படத்துடன் வெளியானது. அதில், மனு கொடுக்கும் போது இருந்த புகைப்படத்தில் தவறுதலாக அருகில் இருந்த நபரின் புகைப்படமும் இணைந்து வெளியிடப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. இதுகுறித்து அந்த படத்தில் இருந்த நபர் சமூக ஊடகங்களில் கண்டனத்தை பதிவு செய்துள்ளதாக கூறப்படுகிறது. எனவே, இதுகுறித்து  MLA -விடம் பொதுமக்கள் சார்பாக வேண்டுகோள் விடுக்கப்பட்டுள்ளது.

அதில்,

"மாண்புமிகு சட்டமன்ற உறுப்பினர் மக்களின் பிரதிநிதி ஆவார். மக்கள் பிரதிநிதியாகிய உங்களிடம் நேற்று 21.11.2024 லக்காபுரம் பொதுமக்கள் சார்பாக பொதுநலன் தொடர்பாக மனு அளிக்கும்போது கனிவுடன் பெற்று ஆவண செய்வதாக தெரிவித்தீர்கள்.

இந்நிகழ்வின்போது புகைப்படங்கள் எடுக்கப்பட்டது. அவை செய்தியாகவும், சமூக ஊடகங்களில் ஓர் நற்செய்தியாகவும் வெளியான நிலையில், அப்புகைப்படத்தில் சட்டமன்ற உறுப்பினர் அருகாமையில் நின்றிருந்த நபர் தன்னுடைய அனுமதி இல்லாமல் தன் புகைப்படம் சமூக வலைதளங்களில் எவ்வாறு வந்தது? எனவும், அதை வன்மையாக கண்டிப்பதாகவும் தெரிவித்துள்ளார்.

பொது நல நோக்கில் மனு கொடுத்தவரை, ஏன் பொது நலனுக்காக மனு கொடுத்தோம் என்று நினைக்கும் வகையில் அந்த புகைப்படத்தில் சட்டமன்ற உறுப்பினர் அவர்களின் அருகில் உள்ள நபர் சமூக வலைதளங்களிலும், வாட்சப் செயலிகளிலும் கண்டனம் தெரிவித்து, மனு கொடுத்தவர்களின் நல்லெண்ண மேற்கொண்டது தவறான முயற்சியாகும். செயல்களை கட்டுப்படுத்த மேற்கொண்டது தவறான முயற்சியாகும். 

எனவே, பொதுமக்களிடம் மனு பெறும்போது இவ்வாறான சிந்தனை உள்ள நபர்களை மாண்புமிகு சட்டமன்ற உறுப்பினர் அவர்கள் தவிர்ப்பது ஜனநாயகத்திற்கு உகந்ததாகும் என அன்புடன் வேண்டப்படுகிறது"    என குறிப்பிடப்பட்டுள்ளது.

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.