காவேரி ஆற்றங்கரையில் ஸ்ரீ வாசவி கல்லூரின் தேசிய மாணவர் படை மாணவர்கள் தூய்மை பணியை மேற்கொண்டனர்.
15 ஆவது தமிழ்நாடு பட்டாலியன் ஈரோடு -ன் தலைமை அதிகாரி கர்னல் அஜய் குட்டினோ அவர்களின் அறிவுறுத்தலின்படி ஸ்ரீ வாசவி கல்லூரின் தேசிய மாணவர் படை மாணவர்கள் 'புனித் சாகர் அபியான்' என்ற திட்டத்தின் கீழ், பவானி அருகே காவேரி ஆற்றங்கரையில் கிடந்த பிளாஸ்டிக் கழிவுகளை சேகரித்து ஆற்றங்கரையை தூய்மைப்படுத்தினர்.
இதில், 65க்கும் மேற்பட்ட தேசிய மாணவர் படை மாணவ-மாணவிகள் கலந்து கொண்டனர். இந்நிகழ்வை லெப்டினன்ட் முனைவர். எம் சரவணன் ராஜா ஒருங்கிணைத்தார்.