ஈரோடு மாநகராட்சிக்குட்பட்ட தேசிய சுகாதார திட்டத்தின் கீழ் உள்ள நகர்புற ஆரம்ப சுகாதார நிலையங்களில் ஆய்வக நுட்புநர் 4 காலிப்பணியிடங்கள் முற்றிலும் தற்காலிகமாக ஒப்பந்த அடிப்படையில் தகுதியானவர்கள் நியமிக்கப்பட உள்ளனர். மாதம் ரூ.13,500/- சம்பளம் வழங்கப்படும்.
இந்த பணியிடங்களுக்கு 12-ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்று Diploma in Lab Technician (2 Years Duration) or certificate in Medical Lab Technology Course (1 Years Duration) தமிழ்நாடு அரசால் அங்கரிக்கப்பட்ட பயிற்சி பள்ளியில் படித்தவர்கள் விண்ணப்பிக்கலாம். இந்த பணியிடம் முற்றிலும் தற்காலிகமானது. ஒப்பந்த அடிப்படையில் மட்டுமே நிரப்பப்படும். ஏக்காரணம் கொண்டும் பணிவரன்முறை, அல்லது நிரந்தரம் செய்யப்பட மாட்டாது. கல்வி சான்று நகல்கள் மற்றும் புகைப்படத்துடன் கூடிய விண்ணப்பத்தை 25 நவம்பர் 2024-ம் தேதிக்குள் ஆணையாளர், ஈரோடு மாநகராட்சி அலுவலகம், மீனாட்சி சுந்தரனார் சாலை, ஈரோடு என்ற முகவரிக்கு அனுப்பி பயன்பெறுமாறு ஈரோடு மாநகராட்சி ஆணையாளர் மரு.மனிஷ்.என். அவர்கள் தெரிவித்துள்ளார்.