Type Here to Get Search Results !

வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்த்தல், நீக்கம், திருத்தம், முகவரி மாற்றம் மேற்கொள்ளுதல் போன்ற சேவைகளை பெறுவதற்கு சிறப்பு முகாம் - நவம்பர் 16, 17, மற்றும் 23, 24-ந் தேதிகளில் நடைபெறும்.


ஈரோடு மாவட்டத்தில் நடைபெறும் வாக்காளர் பட்டியல் சிறப்பு சுருக்கத் திருத்தப் பணிகளை மேற்பார்வையிடுவதற்கு வாக்காளர் பட்டியல் பார்வையாளராக தேர்தல் ஆணையத்தால் நியமனம் செய்யப்பட்டுள்ள தமிழ்நாடு உப்பு நிறுவனத்தின் நிர்வாக இயக்குநர் Dr.C.N.மகேஸ்வரன் அவர்கள், 11.11.2024 இன்று ஈரோடு மாவட்டத்திற்கு வருகை தந்து அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சி பிரதிநிதிகளுடன் ஆலோசனை மேற்கொள்ள உள்ளார் என ஈரோடு மாவட்ட தேர்தல் அலுவலர் மற்றும் மாவட்ட ஆட்சித் தலைவர் அவர்கள் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து ஈரோடு மாவட்ட தேர்தல் அலுவலர் மற்றும் மாவட்ட ஆட்சித் தலைவர் அவர்கள் தெரிவித்துள்ளதாவது,

இந்திய தேர்தல் ஆணைய அறிவுறுத்தலின்படி, சிறப்பு சுருக்கத்திருத்தம் 2025 ன் ஒரு பகுதியாக ஈரோடு மாவட்டத்தில் 29.10.2024 அன்று வரைவு வாக்காளர் பட்டியல் வெளியிடப்பட்டு, அன்று முதல் 28.11.2024 வரை வாக்காளர் பட்டியல் திருத்தப்பணிகள் மேற்கொள்ளப்படவுள்ளது.

அதன் பொருட்டு, எதிர்வரும் நவம்பர் 16, 17, மற்றும் 23, 24-ந் தேதிகளில் (சனி, ஞாயிற்றுக் கிழமைகளில்) 4 நாட்கள் வாக்காளர்களுக்கான சிறப்பு முகாம் ஈரோடு மாவட்டத்தில் 8 சட்டமன்ற தொகுதிகளில் அமைந்துள்ள 2222 வாக்குச்சாவடி மையங்களில் நடைபெறவுள்ளது. மேலும், சிறப்பு முகாம் நடைபெறும் நாட்களைத்தவிர வாக்குச்சாவடி அமைவிடங்களிலும் மற்றும் சம்மந்தப்பட்ட வாக்காளர் பதிவு அலுவலர் மற்றும் உதவி வாக்காளர் பதிவு அலுவலர் அலுவலகங்களிலும் 28.11.2024 வரை காலை 10.00 மணி முதல் மாலை 5.00 மணி வரை பொது மக்களிடமிருந்து படிவங்கள் பெறப்படும் எனத் தெரிவித்துக்கொள்ளப்படுகிறது.








01.01.2025 அன்று 18 வயது நிறைவடைந்தவர்கள் வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்ப்பதற்கு படிவம்-6 மற்றும் வெளிநாடு வாழ் வாக்காளர் பெயர் பதிவு செய்வதற்கு படிவம் -6A, வாக்காளர் அடையாள அட்டையுடன் ஆதார் எண்ணை இணைப்பதற்கு படிவம் 6B, வாக்காளர் பெயர் நீக்கம் செய்தல் மற்றும் வாக்காளர் பெயரை சேர்ப்பதற்கு ஆட்சேபனை தெரிவிப்பதற்கு படிவம்-7, முகவரி மாற்றம் / நடப்பு வாக்காளர் பட்டியலில் உள்ள பதிவுகளை திருத்தம் செய்வதற்கு, மாற்று வாக்காளர் புகைப்பட அடையாள அட்டை பெறுவதற்க்கு மற்றும் மாற்றுத்திறனாளி என குறியீடு செய்வதற்கு படிவம் 8 யினை சமர்ப்பிக்க வேண்டும் எனத் தெரிவித்துக்கொள்ளப்படுகிறது.

ஈரோடு மாவட்டத்தில் உள்ள பொதுமக்கள் வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்த்தல், நீக்கம், திருத்தம், முகவரி மாற்றம் மேற்கொள்ளுதல் மற்றும் வாக்காளர் பட்டியலுடன் ஆதார் இணைக்கும் பணிகள் மேற்கொள்ளுதல் போன்ற சேவைகளை பெறுவதற்கு தேவையான படிவங்களை பூர்த்தி செய்து கீழ்க்கண்ட ஆவணங்களுடன் சமர்ப்பிக்க வேண்டும் எனத் தெரிவித்துக்கொள்ளப்படுகிறது.

பொதுமக்கள் வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்க, பிறந்த தேதிக்கான ஆதார ஆவணங்களாக (பின்வருவனவற்றுள் ஏதேனும் ஒன்று) 1. பிறப்புச்சான்று (Birth Certificate) 2. நிரந்தர கணக்கு எண் அட்டை (Pan Card) 3. ஒட்டுநர் உரிமம் (Driving License) 4. மாநில கல்வி வாரியங்களால் வழங்கப்பட்ட பத்தாம் வகுப்பு அல்லது பன்னிரெண்டாம் வகுப்பு சான்றிதழில் பிறந்த தேதி இருந்தால் 5.இந்திய கடவுச்சீட்டு (Indian Passport) மற்றும் புகைப்படம் சமர்ப்பிக்க வேண்டும் என தெரிவித்துக்கொள்ளப்படுகிறது.

வாக்காளர் பட்டியலில் பெயர் நீக்கம் செய்யவதற்கு 1. இறப்பு எனில் இறப்புச்சான்றும், 2. நிரந்தரமாக குடி பெயர்ந்தவர் எனில் அதற்குரிய முகவரி சான்றும் சமர்ப்பிக்கவும் மற்றும் வாக்காளர் பட்டியலில் உள்ள வாக்காளர் விவரங்களை திருத்தம் மேற்கொள்வதற்கு 1.ஆதார் அட்டை 2.குடிபெயர்ப்பிற்கான சான்று மற்றும் 3. மாற்றுத்திறனாளி என குறிப்பிட வேண்டும் எனில் மாற்றுத்திறனாளிக்கான சான்று ஆதார ஆவணங்களாக சமர்ப்பிக்க வேண்டுமெனத் தெரிவிக்கப்படுகிறது.








ஈரோடு மாவட்டத்தில் உள்ள அனைத்து தகுதியான வாக்காளர்கள் உரிய படிவங்களை பூர்த்தி செய்து தேவையான ஆவணங்களுடன் வழங்கி வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்த்தல், நீக்கம், திருத்தம், முகவரி மாற்றம் மேற்கொள்ளுதல் போன்ற சேவைகளை பெறுவதற்கு சிறப்பு முகாம் நடைபெறும் நாளினை முழுமையாக பயன்படுத்தி கொள்ள தெரிவித்துக்கொள்ளப்படுகிறது.

மேற்காண் சேவைகளை இணைய வழியில் பெறுவதற்கு ஏற்கனவே நடைமுறையில் உள்ள voters.eci.gov.in என்ற இணையதள முகவரியிலும் Voter Helpline App என்ற செயலி மூலமாகவும் வாக்காளர் சேவைகளை பெற தேர்தல் ஆணையம் வழிவகை செய்துள்ளது எனவும், மேலும் பொதுமக்கள் வாக்காளர் அடையாள அட்டை தொடர்பாக ஏற்படும் சந்தேகங்களுக்கு ஈரோடு மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் உள்ள கட்டணமில்லா சேவை எண். 0424-1950 னை தொடர்பு கொள்ளலாம் என மாவட்ட தேர்தல் அலுவலர் மற்றும் மாவட்ட ஆட்சித் தலைவர் ராஜ கோபால் சுன்கரா அவர்கள் தெரிவித்துள்ளார்.







Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.