தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் 2 நாட்கள் அரசு மற்றும் கட்சி நிகழ்வுகளில் பங்கேற்பதற்காக ஈரோட்டிற்கு வருகிறார். இதனையொட்டி, வீட்டுவசதி மற்றும் நகர்ப்புற நகர்ப்புற வளர்ச்சித் துறை அமைச்சர் சு.முத்துசாமி அரசு விழா நடக்கும் சோலார் புதிய பேருந்து நிலைய வளாகத்தில் அமைக்கப்பட்டுள்ள பிரமாண்ட பந்தல் மேடையினை பார்வையிட்டு, ஆய்வு செய்தார்.
மாவட்ட ஆட்சியர் ராஜ கோபால் சுன்கரா, முதல்வரின் பாதுகாப்பு பிரிவு காவல் கண்காணிப்பாளர் செந்தில்குமார், மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஜவகர், திமுக வடக்கு மாவட்ட செயலாளர் நல்லசிவம் ஆகியோர் உடனிருந்தனர்.