Type Here to Get Search Results !

குழந்தை திருமணம் குறித்து தகவல் தெரிவிக்க புதிய அலைபேசி எண் - ஈரோடு கலெக்டர் தகவல்


2006 குழந்தைத் திருமண தடைச் சட்டத்தின்படி குழந்தையைத் திருமணம் செய்யும் நபருக்கு 2 ஆண்டு கடுங்காவல் தண்டனையும், ரூபாய் 1,00,000/- வரையிலான அபராதமும் விதிக்கப்படும்.

இந்தியாவில் பெண்களுக்கு 18 வயதும், 21 வயது நிறைவடைந்த ஆணும் திருமணத்திற்கு சட்டப்பூர்வமான வயதாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
குழந்தை திருமணம் செய்வதற்கு ஏற்பாடு செய்யும் பெற்றோர், உறவினர்கள், மணம் முடித்து வைக்கும் பூசாரி அல்லது குருமார்கள், மற்றும் திருமணம் நடைபெறும் திருமண மண்டபம், சமுதாய கூடம் போன்றவற்றின் உரிமையாளர்களும் தண்டனைக்குரியவர்கள் ஆவார். குழந்தைத் திருமண தடைச் சட்டத்தின்படி அவர்கள் மீதும் வழக்கு தொடரப்படும்.












ஈரோடு மாவட்டத்தில் குழந்தை திருமணங்கள் தடுப்பதற்கு, மாவட்ட நிர்வாகம் பல்வேறு நடவடிக்கை மேற்கொள்கிறது அந்த வகையில் குழந்தை திருமணங்கள் தடுப்பதற்கு ஏற்கனவே சைல்டு லைன் இலவச தொலைபேசி எண்: 1098 மற்றும் மகளிர் உதவி இலவச அழைப்பு எண்: 181ஆகியவை உடன், தற்போது குழந்தை திருமணங்களை தடுக்கும் பொருட்டு தகவல் தெரிவிப்பதற்கு, முன்னோட்ட அடிப்படையில் புதிய அலைபேசி எண் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. : 8903167788

ஈரோடு மாவட்டத்தில் நடைபெறும் குழந்தை திருமணங்களை தடுக்கும் பொருட்டு திருமணம் நடைபெறுவதற்கு முன்பும், ஏற்கனவே நிச்சயம் செய்யப்பட்ட திருமணங்கள் குறித்தும் உண்மையான, உறுதியான, தகவல் அளிப்பவர்களை ஊக்குவிக்கும் பொருட்டு அந்த திருமணம் தடுத்து நிறுத்தப்பட்டால் சன்மானத் தொகை ரூ.3000/- மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்களின் விருப்பக்கொடை நிதியிலிருந்து வழங்கப்படும், என மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் தெரிவித்துள்ளார்.





Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.