முன்னாள் பாரத பிரதமர் டாக்டர் மன்மோகன் சிங் அவர்கள் மறைவையொட்டி ஈரோடு மாநகர் மாவட்ட காங்கிரஸ் கமிட்டி சார்பாக அவரது திருவுருவப்படத்திற்கு இன்று 27/12/2024 காலை 10:30 மணிக்கு ஈரோடு மாவட்ட காங்கிரஸ் கமிட்டி அலுவலகமான ஜவஹர் இல்லத்தில் ஈரோடு மாநகர் மாவட்ட காங்கிரஸ் கமிட்டி தலைவர் டி. திருச்செல்வம் தலைமையில், மாவட்ட துணைத்தலைவர் பா.ராஜேஷ் ராஜப்பா, மண்டல தலைவர்களான ஆர்.விஜயபாஸ்கர், எச் எம். ஜாபர் சாதிக் ஆகியோர் முன்னிலையில் தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டியின் மேலிட பொறுப்பாளரும் முன்னாள் சட்டமன்ற உறுப்பினருமான எம் என் கந்தசாமி அவர்கள் திருவுருவ படத்திற்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.
இந்நிகழ்ச்சியில், மாநில பொதுக்குழு உறுப்பினர் எ மாரியப்பன், தமிழ்நாடு தொழிலாளர் காங்கிரஸ் மாநிலத் துணைத் தலைவர் (டி சி டி யூ) குளம் எம் ராஜேந்திரன், மாவட்டத் துணைத் தலைவர்களான பாபு என்கிற வெங்கடாசலம், சி பாஸ்கர்ராஜ், மாவட்ட பொது செயலாளர்களான ஏசி சாகுல் ஹமீத், இரா.கனகராஜன், எ.அன்பழகன், ஈரோடு மாவட்ட காங்கிரஸ் ஊடகப்பிரிவு தலைவர் ம. முகமது அர்சத், முன்னாள் ஈரோடு பாராளுமன்ற இளைஞர் காங்கிரஸ் தலைவர் கே விஜய்கண்ணா, ஈரோடு மாநகர் மாவட்ட காங்கிரஸ் சிறுபான்மை துறை தலைவர் எம்.ஜூபைர் அகமது,
துணைத்தலைவர் கே என் பாஷா, சேவாதள மாவட்ட தலைவர் எஸ் முகமது யூசுப், ஈரோடு மாவட்ட இளைஞர் காங்கிரஸ் தலைவர் சித்தோடு எஸ் பிரபு, என் சி டபிள்யூ சி மாவட்ட தலைவி ஆர் கிருஷ்ணவேணி, நெசவளார் அணி மாவட்ட தலைவர் சி மாரிமுத்து, ஓபிசி பிரிவு மவட்ட தலைவர் சூர்யா சித்திக், முன்னாள் நகர தலைவர் குப்பண்ணா சந்துரு, மாவட்ட நிர்வாகிகளான கே ஜே டிட்டோ, கராத்தே எ.அப்துல் காதர், சூரம்பட்டி விஜயகுமார், ராஜாஜிபுரம் குமரேசன், வள்ளிபுரத்தன்பாளையம் எஸ் தங்கவேல், நரி பள்ளம் ரவிச்சந்திரன் மற்றும் பலர் திரளாக கலந்து கொண்டு மலர் தூவி அஞ்சலி செலுத்தினார்கள்.