கோபி கலை மற்றும் அறிவியல் கல்லூரியின் இரத்த கொடையாளர் மற்றும் செஞ்சிலுவை சங்கம் சமீபத்தில் கல்லூரி வளாகத்தில் கோபி அரசு மருத்துவமனையின் குருதி வங்கியுடன் இணைந்து நடத்திய இரத்ததான முகாம் நடைபெற்றது. இதில், மாணவ - மாணவியர்கள் மற்றும் கல்லூரி அலுவலர்களால் 52 அலகுகள் இரத்தம் கொடையாக வழங்கப்பட்டது.
கல்லூரியின் முதல்வர் முனைவர் பொ.நரேந்திரன் அவர்கள் தலைமையில் நடைபெற்ற இம்முகாமில் கல்லூரியின் தாளாளர் மு.தரணிதரன் அவர்கள், முதன்மையர்கள் முனைவர் ஆ. செல்லப்பன் அவர்கள், முனைவர் வி தியாகராசு அவர்கள், குருதி வங்கி மருத்துவ அதிகாரி மருத்துவர் ஐ.ராஜ்குமார் அவர்கள், செவிலியர்கள் மற்றும் மருத்துவப் பணியாளர்கள் கலந்து கொண்டனர். குருதிக்கொடை அளித்த அனைவரையும் கல்லூரி முதல்வர் மற்றும் பேராசிரியர்கள் பாராட்டினர். கொடையாளர்கள் அனைவருக்கும் பாராட்டு சான்றிதழ்கள் வழங்கப்பட்டன. இம்முகாமிற்கான ஏற்பாடுகளை இரத்தக் கொடையாளர் மற்றும் செஞ்சிலுவை சங்க அலுவலர்கள் முனிவர் ஜி. கவிதா அவர்கள், முனைவர் பி. துரைசாமி அவர்கள், ஈ. உதயகுமார் மற்றும் மாணவர் தொண்டர்கள் சிறப்பாக செய்திருந்தனர்.