Type Here to Get Search Results !

ஃபெங்கல் புயலினால் பாதிக்கப்பட்டுள்ள விழுப்புரம் மாவட்ட பொதுமக்களுக்கு நிவாரண பொருட்கள் அடங்கிய வாகனத்தினை மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் முஹம்மது குதுரலத்துல்லா கொடியசைத்து அனுப்பி வைத்தார்.

 


ஃபெங்கல் புயலினால் பாதிக்கப்பட்டுள்ள விழுப்புரம் மாவட்ட பொதுமக்களுக்கு மாவட்ட ஆட்சித்தலைவர் ராஜ கோபால் சுன்கரா அவர்களின் வழிகாட்டுதலின்படி, இன்று (05.12.2024) ஈரோடு மாவட்ட நிர்வாகம் சார்பில் அத்தியாவசியப் பொருட்கள் அடங்கிய வாகனத்தினை மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் (பொது) முஹம்மது குதுரலத்துல்லா அவர்கள் கொடியசைத்து அனுப்பி வைத்தார்.


ஃபெங்கல் புயலினால் பாதிக்கப்பட்டுள்ள பொதுமக்களுக்கு மாவட்ட நிர்வாகம், பொதுமக்கள் மற்றும் CII, YOUNG INDIANS மற்றும்  பல்வேறு தன்னார்வ தொண்டு நிறுவனங்களின் சார்பில் வழங்கப்பட்ட நிவாரண பொருட்களை அனுப்பி வைக்கும் வகையில் முதற்கட்டமாக இன்றைய தினம் அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. இதில் 1460 பிரட் பாக்கெட்கள், 3990 குடிநீர் பாட்டில்கள், 2420 பிஸ்கட் பாக்கெட்கள் மற்றும் 3600 எண்ணிக்கையில் அரிசி, பருப்பு, கோதுமை மாவு, ரவை, எண்ணெய், உப்பு உட்பட 11470 எண்ணிக்கையில் ரூ.4,34,100/- மதிப்பீட்டிலான அத்தியாவசியப் பொருட்கள் அடங்கிய வாகனம் அனுப்பி வைக்கப்பட்டது. மேலும் பொதுமக்கள், மாவட்ட நிர்வாகம் மற்றும் பல்வேறு தன்னார்வ தொண்டு நிறுவனங்கள் மூலம் பெறப்படும் நிவாரண பொருட்கள் தொடர்ந்து அனுப்பி வைக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. 

இந்நிகழ்வில், ஈரோடு வருவாய் வட்டாட்சியர் முத்துகிருஷ்ணன், தாசில்தார்  உட்பட தொடர்புடைய துறை அலுவலர்கள் உடனிருந்தனர்.

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.