அரிமா இயக்கத்தின் நிறுவனர் அரிமா மெல்வின் ஜோன்ஸ் அவர்களின் பிறந்த நாளை முன்னிட்டு, சாலையோரம் உணவின்றி தவிப்பவர்களுக்கு உணவு வழங்கும் நோக்குடன் ஈரோடு எல்லோ சன் சிட்டி அரிமா சங்கத்தின் சார்பில் நேற்று (13.01.2025) சுமார் ரூ.3000/- மதிப்புள்ள உணவு வழங்கப்பட்டது.
இதில், ஈரோடு எல்லோ சன் சிட்டி அரிமா சங்கத்தின் பட்டைய தலைவர் அரிமா ஜஹேரா தைசூன், பட்டயச் செயலர் (நிர்வாகம்) அரிமா தைசூன் முனீர், பட்டயப் பொருளர் அரிமா P.ஹரிஹரன், அரிமா E.தனஞ்ஜெயன் (செய்தி பிரிவு), அரிமா மாலதி ஹரிஹரன் ஆகியோர் மற்றும் பலர் கலந்து கொண்டு சுமார் 100 நபர்களுக்கு உணவு அளிக்கப்பட்டது.