ஈரோடு கிழக்கு சட்டமன்ற இடைத்தேர்தலில் இந்தியா கூட்டணியின் வேட்பாளர் வி. சி. சந்திரகுமார் அவர்களை ஆதரித்து 15.01.2025 இன்று காலை மாண்புமிகு தமிழ்நாடு வீட்டு வசதி மற்றும் நகர்ப்புற வளர்ச்சித்துறை அமைச்சர் சு. முத்துசாமி அவர்கள் பெரியார் நகர் பகுதியில் 34, 46 ம் வார்டில் உள்ள
வாமாலை வீதி, பெருமாள் வீதி, சின்னப்ப வீதி, கிராமடை 4 மற்றும் 5 வது வீதி, லட்சுமணண் வீதி, அவ்வையார் வீதி, வேலா வீதி, தேவா வீதி, கிராமடை 7வது வீதி ஆகிய பகுதிகளில் சென்று உதயசூரியன் சின்னத்திற்கு வாக்கு சேகரித்தார்.
இதில், மாநகர கழக செயலாளர் மு. சுப்ரமணியம் அவர்கள் மற்றும் கழக மாநில, மாவட்ட, மாநகர நிர்வாகிகள், பகுதி கழக நிர்வாகிகள், வட்டக் கழக நிர்வாகிகள், கழக சார்பு அணியினர் பலர் கலந்து கொண்டனர்.