ஈரோடு தே.மு.தி.க. மாவட்ட இளைஞர் அணி துணை செயலாளர் திருநாவுக்கரசு தலைமையில் 50 -க்கும் மேற்பட்ட மேற்பட்ட தொண்டர்கள் திமுக வேட்பாளர் வி.சி.சந்திரகுமாருக்கு ஆதரவு தெரிவித்து தே.மு.தி.க - வில் இருந்து விலகி, தமிழ்நாடு வீட்டு வசதி மற்றும் நகர்ப்புற வளர்ச்சி துறை அமைச்சர் சு. முத்துசாமி அவர்களின் முன்னிலையில் தங்களை திமுகவில் இணைத்து கொண்டனர்.
இந்நிகழ்வில், ஈரோடு திமுக தெற்கு மாவட்ட துணை செயலாளர் செந்தில்குமார், திமுக தெற்குமாவட்ட சுற்றுச்சூழல் அணி அமைப்பாளர் இமயம் சிவக்குமார், துணை அமைப்பாளர் T. சுப்ரமணியம், கொல்லம்பாளையம் பகுதி செயலாளர் லட்சுமண குமார், தலைமைக் கழக பேச்சாளர் ப. இளைய கோபால் ஆகியோர் கலந்து கொண்டனர்.