கோபிசெட்டிபாளையம் அந்தியூர் சாலையில் அமைந்துள்ள அருள்மிகு பாரியூர் கொண்டத்து காளியம்மன் திருவிழாவானது வருடம் தோறும் சிறப்பான முறையில் கொண்டாடப்பட்டு வருகிறது.
இக்கோவிலில் 26.12.2024 அன்று பூச்சாட்டுதல் நிகழ்ச்சி நடத்தப்பட்டது. பிறகு 06.01.2025 அன்று சந்தன காப்பு நடைபெற்றது.
அதையடுத்து 09.01.2025 இன்று, திருக்குண்டம் திருவிழா நடைபெற்றது. திருக்குண்ட திருவிழாவில் முதலில் கோவில் பூசாரி இறங்கி துவக்கி வைத்தார்.
பிறகு காவல்துறை அதிகாரிகளான கோபி ஆய்வாளர் காமராஜ், உதவி காவல் ஆய்வாளர்கள் சத்யன் மற்றும் ஜெகநாதன், காவலர்கள், அரசியல் பிரமுகர்கள், பொதுமக்கள் என 1000க்கும் மேற்பட்ட பக்தர்கள் குண்டம் இறங்கினர்.
மேலும், இத்திருவிழாவில் கலந்துகொண்டு அம்மனை தரிசிக்க அருகில் உள்ள பல மாவட்டங்களில் இருந்தும், கேரளா, கர்நாடகா மற்றும் பல மாநிலங்களில் இருந்தும் பக்தர்கள் வருகை புரிந்திருந்தனர்.