வடகிழக்கு பருவமழை தொடங்கிய இக்காலத்தில் மழைநீர் சேகரிப்பின் முக்கியத்துவம் குறித்து பொதுமக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்தும் பொருட்டு தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரியத்தின் சார்பில் மழைநீர் சேகரிப்பு தொடர்பான விழிப்புணர்வு பேரணி மற்றும் வாகனத்தின் மூலம் விழிப்புணர்வு ஏற்படுத்தும் விதமாக மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்திலிருந்து தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரிய அலுவலர்கள் மற்றும் பணியாளர்கள் கலந்து கொண்ட மழைநீர் சேகரிப்பு விழிப்புணர்வு பேரணியை திட்ட இயக்குநர் (ஊரக வளர்ச்சி முகமை) அவர்கள் கொடியசைத்து துவக்கி வைத்தார்.
இந்த பேரணியானது தாகம் தீர்க்கும் குடிநீர், தரமான குடிநீர் தேகம் காக்கும், வான் மழை நீரை மாசு இல்லாமல் காப்போம் என்ற பதாகைகளை ஏந்தியபடி மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகம் தொடங்கி சம்பத் நகர் வரை சென்று விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.
தொடர்ந்து, அதிநவீன மின்னணு வீடியோ வாகனம் மூலம் மழைநீர் சேகரிப்பு குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்த ஒரு வார காலத்திற்கு ஈரோடு மாவட்டம் முழுவதும் ஒளிபரப்பும் வாகனத்தினை தொடங்கி வைத்தார். இவ்வாகனம் பொது மக்கள் அதிகமாக கூடும் பகுதிகளிலும், பள்ளி, மற்றும் கல்லூரி வளாகப் பகுதிகளிலும் ஒளிபரப்பப்பட உள்ளது.
இந்நிகழ்ச்சியில், தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரிய மேற்பார்வைப் பொறியாளர் மோ.விநாயகம், துணை மேற்பார்வைப் பொறியாளர் க. ரவிக்குமார், நிர்வாகப் பொறியாளர் வீ. சு. விஜயகுமார், உதவி நிர்வாகப் பொறியாளர் எஸ். டி. சரவணன், துணை நிலை நீர் வல்லுநர் அ. துரைசாமி மற்றும் வாரிய அலுவலர்கள் உட்பட துறை சார்ந்த அலுவலர்கள் கலந்து கொண்டனர்.
%20(1).jpg)
.jpeg)
.jpeg)
.jpeg)
