ஈரோடு மாவட்டம், சித்தோடு அரசினார் பொறியியல் கல்லுாரி கலையரங்கத்தில் இன்று (30.10.2025) மாவட்ட ஆட்சித்தலைவர் ச.கந்தசாமி அவர்கள் கல்லூரி கலைத் திருவிழாவில் வெற்றி பெற்ற மாணவ, மாணவியர்களுக்கு பாராட்டு சான்றிதழ்களை வழங்கினார்.
இந்நிகழ்ச்சியில் மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் தெரிவித்ததாவது,
மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் அரசு கல்லூரிகளில் கலைத்திருவிழா நடத்த வேண்டும் 67601 அறிவித்ததன் அடிப்படையில், கல்லூரிகளில் கலைத்திருவிழா நடத்தப்பட்டு இன்றைய தினம் பரிசளிப்பு விழா நடைபெறதுகிறது. இதன் மூலம் மாணவர்கள் தங்கள் தனித்துவமான பலங்களை வெளிப்படுத்தவும், புதிய திறன்களை வளர்க்கவும், துறைகளில் ஒத்துழைக்கவும் கூடிய ஒரு உள்ளடக்கிய தளத்தை உருவாக்கவும், மேலும், இளைஞர்களிடையே படைப்பாற்றல், விமர்சன சிந்தனை, புதுமை மற்றும் கலாச்சார பெருமையை வளர்க்கும் ஒரு இயக்கமாக இருக்க வேண்டும் என்பதே இதன் நோக்கம். இது தமிழ்நாட்டிற்கான ஒரு விரிவான திறமையான துறையை உருவாக்குவதற்கான ஒரு ஊக்கமாக செயல்படும். அதன் இளைய தலைமுறையின் தொலைநோக்கு, புத்தி கூர்மை மற்றும் திறமையை வெளிப்படுத்தும்.
இந்தியாவிலேயே 12-ம் வகுப்பு முடித்து உயர்கல்விக்கு செல்லும் மாணவ, மாணவியர்களின் எண்ணிக்கையில் தமிழ்நாடு முன்னோடி மாநிலமாக திகழ்ந்து வருகிறது என்றால் மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் மாணவ, மாணவியர்கள் உயர்கல்வி பெறுவதற்கு தரும் முக்கியத்துவம்தான் அதற்கு காரணம். மேலும் அவர்களின் கல்லூரி படிப்பு மட்டுமல்லாமல் வேலைவாய்ப்பு உருவாக்கித் தருவதிலும் கவனம் செலுத்தி நான் முதல்வன் திட்டத்தின் மூலம் மருத்துவம், கலை, அறிவியல், பொறியியல் உள்ளிட்ட அனைத்துத்துறை பயிலும் மாணவ, மாணவியர்களுக்கும் பயிற்சி மற்றும் தொழில்நுட்ப உதவிகள் வழங்கி வருகிறார்கள். மாண்புமிகு தமிழ்நாடு துணை முதலமைச்சர் அவர்கள் கல்வியறிவு மட்டுமல்லாமல் விளையாட்டிலும் சிறந்து விளங்க வழிவகை வருகிறார்கள். கலை நிகழ்ச்சிகள் நடத்தி மாணவ, மாணவியர்களுக்கு கலை மற்றும் இலக்கியம் சாரந்த துறைகளில் சிறந்து விளங்க வழிவகை செய்வதுடன், அவர்களின் உடல்நலனிலும் மிகுந்த அக்கறை கொண்டு, முதலமைச்சர் கோப்பை செய்து விளையாட்டு போட்டிகள் நடத்தி அதில் பள்ளி, கல்லூரி, மாணவ, மாணவியர்கள், பொதுமக்கள், அரசு ஊழியர்கள், மாற்றுத்திறனாளிகள் ஆகியோர் விளையாட்டுத்துறையில் தங்களின் திறமையை காண்பிக்க வழிவகை செய்து வருகிறார்கள். மேலும், விளையாட்டு உபகரணங்கள் வழங்கி கிராமப்புற மாணவர்களும் பயிற்சி பெறவும், உடல்தகுதி பெறவும், வெளிநாட்டில் நடைபெறும் விளையாட்டு போட்டிகளில் திறமையுள்ளவர்கள் கலந்து கொள்ளவும் நடவடிக்கை மேற்கொண்டு வருகிறார்கள்.
கற்றது கை மண்ணளவு, கல்லாதது உலகளவு என்ற கூற்றிற்கு ஏற்றாற்போல் நாம் மென்மேலும் நிறைய விஷயங்களை கற்றுக் கொள்வதுடன் புத்தகங்கள் வாசிக்கும் பழக்கத்தையும் ஏற்படுத்திக் கொள்ள வேண்டும். தனி மனிதன் உயர வேண்டும் என்றால் அது கல்வி ஒன்றால் மட்டுமே சாத்தியமாகும். அப்படிப்பட்ட கல்வியை அனைவரும் உணர்ந்து கற்று வாழ்வில் முன்னேற வேண்டும், மேலும் தனித்திறமையையும் வளர்த்திக் கொள்ள வேண்டும் என தெரிவித்தார்.
தொடர்ந்து, 28.09.2025 அன்று முதல் 25.10.2025 அன்று வரை நடைபெற்ற கலைத் திருவிழாவில், கவிதை, சிறுகதை, பேச்சு, வர்ணனை, வலையொளி பரப்பு, பட்ஜெட் போர், புதையல் வேட்டை, புதிய தொழில்நுட்பத்திலும் கலக்குவோம், இசை, நடனம், ஓவியம், அவியல், ஒவ்வொரு பூக்களுமே, கவனிக்க மறந்த காட்சிகள், குறும்படம், கலை வடிவியல், இளைஞர் பட்டிமன்றம், விவாத மேடை உள்ளிட்ட 31 போட்டிகளில் வெற்றி பெற்று முதல் மூன்று இடங்களை பிடித்த 93 மாணவ மாணவியர்களுக்கு பாராட்டு சான்றிதழ்களை வழங்கினார். ஈரோடு மாவட்டத்தில் இந்த கலை திருவிழா போட்டிகளில் 5 அரசு கலை மற்றும் அறிவியல் கல்லுரிகள், 3 பாலிடெக்னிக் கல்லூரிகள், 1 பொறியியல் கல்லூரி என 9 கல்லூரிகளை சேர்ந்த 3000 மாணவ, மாணவியர்கள் கலந்து கொண்டு தங்களது திறமைகளை வெளிப்படுத்தினர்.
%20copy1%20(1).jpg)
இவ்விழாவில், சித்தோடு அரசினார் பொறியியல் கல்லூரி முதல்வர் முனைவர். ஆ. சாரதா, ஒருங்கிணைப்பு அலுவலர் ஆ. வெற்றிவேல், மக்கள் சிந்தனைப் பேரவை தலைவர் ஸ்டாலின் குணசேகரன் உட்பட மாணவ, மாணவியர்கள் மற்றும் துறை சார்ந்த அலுவலர்கள் கலந்து கொண்டனர்.
%20(1).jpg)
.jpeg)
%20(1).jpeg)
.jpeg)
.jpg)
%20(1).jpeg)
.jpeg)
.jpeg)
%20(1).jpeg)
