ஈரோடு, வேப்பம்பாளையம், முத்து மஹாலில், வாங்குவோர் – விற்போர் சந்திப்பு நிகழ்வு, குறு, சிறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்களின் தொழில் ஆணையர் மற்றும் தொழில் வணிகத்துறை இயக்குனர் எல்.நிர்மல்ராஜ் அவர்கள் தலைமையில், மாவட்ட ஆட்சித்தலைவர் ச.கந்தசாமி அவர்கள் முன்னிலையில் இன்று (14.11.2025) நடைபெற்றது.
தமிழ்நாடு அரசின் சார்பில் குறு, சிறு மற்றும் நடுத்தரத் தொழில் நிறுவனங்கள் துறையின் FaMe TN அமைப்பு மூலம் வாங்குவோர் விற்பார் சந்திப்பு [RBS- Reverse Buyer Seller Meet] நிகழ்வில் ஈரோடு, வேப்பம்பாளையம், முத்து மஹாலில் இன்று (14.11.2025) மற்றும் நாளை 15.11.2025 ஆகிய 2 தினங்கள் நடைபெறுகிறது. இந்நிகழ்வில், ஈரோடு மற்றும் அதனைச் சுற்றியுள்ள மாவட்டங்களைச் சார்ந்த 500க்கும் மேற்பட்ட குறு, சிறு மற்றும் நடுத்தரத் தொழில் நிறுவனங்களும், 10 நாடுகளைச் சேர்ந்த 40க்கும் மேற்பட்ட வெளிநாட்டு நிறுவனங்கள் பங்கேற்று உள்ளூர் தயாரிப்புகளை சர்வதேச சந்தைகளில் அறிமுகப்படுத்தும் நோக்கில் கலந்துரையாடினார்கள்.
குறிப்பாக ஜவுளி, விவசாயம் மற்றும் உணவு சார்ந்த பொருட்கள், கயிறு சார்ந்த பொருட்கள் மற்றும் தோல் பொருட்கள் தயாரிக்கும் இப்பகுதியைச் சார்ந்த நிறுவனங்கள் ஏற்றுமதி செய்ய, வெளிநாடுகளைச் சார்ந்த நிறுவனங்களுடன் புரிந்துணர்வு ஒப்பந்தம் செய்யும் வாய்ப்பாகவும் அமைக்கப்பட்டிருந்தது.
இந்நிகழ்ச்சியில், பொது மேலாளர் (மாவட்ட தொழில் மையம்) திருமுருகன், மாவட்ட முன்னோடி வங்கி மேலாளர் விவேகானந்தன், கோவை, திருப்பூர், சேலம் மாவட்ட தொழில் மைய பொது மேலாளர்கள், வங்கி ஒருங்கிணைப்பாளர்கள், ஈடிசியா, ஃபாட்டியா தொழிற்கூட்டமைப்புகள் உட்பட துறை சார்ந்த அலுவலர்கள் கலந்து கொண்டனர்.
%20(1).jpg)
%20(1).jpeg)
.jpeg)
.jpeg)
.jpeg)
%20(1).jpeg)