Type Here to Get Search Results !

பள்ளி மாணவ, மாணவியர்களுக்கு விலையில்லா மிதிவண்டிகள் வழங்கும் திட்டத்தினை தொடர்ந்து கலெக்டர் மிதிவண்டிகளை வழங்கினார் .


ஈரோடு மாநகராட்சி, பன்னீர் செல்வம் பூங்கா அரசு பெண்கள் மாதிரி மேல்நிலைப்பள்ளியில் இன்று (14.11.2025) பள்ளி மாணவ மாணவியர்களுக்கு விலையில்லா மிதிவண்டிகளை மாண்புமிகு வீட்டு வசதி, மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைத்துறை அமைச்சர் சு.முத்துசாமி அவர்கள் வழங்கினார்.


இவ்விழாவில் மாண்புமிகு வீட்டு வசதி, மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைத்துறை அமைச்சர் அவர்கள் பேசும் போது தெரிவித்ததாவது,

மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் பள்ளி மாணவ மாணவியர்களின் நலனுக்காக அவர்களின் நலன் மேல் அக்கறை கொண்டு பல்வேறு திட்டங்களை அறிவித்து செயல்படுத்தி வருகிறார்கள். பள்ளி குழந்தைகள் சோர்வின்றி படித்திட காலை உணவு திட்டம், அரசு பள்ளியில் படித்து 12 வகுப்பு முடித்து உயர்கல்விக்கு செல்லும் மாணவ மாணவியர்களுக்கு மாதம் 1000 ரூபாய் வழங்கும் புதுமைபெண் மற்றும் தமிழ்புதல்வன் திட்டம், மாற்ற மாநில மாணவ மாணவியர்களுடன் இணையாக போட்டி தேர்வுகளில் வெற்றி பெறும் வகையில் உள்ள நான் முதல்வன் திட்டம். மேலும் மாணவ மாணவியர்கள் உடல், மனம் ஆரோக்கியத்தை காத்திடும் வகையில் மாண்புமிகு தமிழ்நாடு துணை முதலமைச்சர் அவர்கள் விளையாட்டு துறையில் பல்வேறு திட்டங்களை அறிவித்து செயல்படுத்தி வருகிறார்கள். சிவகிரி பகுதியில் சிறு விளையாட்டு அரங்கம் பணிகள் துவக்கப்பட்டு நடைபெற்று வருகிறது. மேலும் அரசு சிக்கய்ய கலை மற்றும் அறிவியல் கல்லுாரியில் சிறு விளையாட்டு அரங்கம் அமைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது என தெரிவித்தார். 


அதன்படி இன்றைய தினம் ஈரோடு மாவட்டத்தில் பள்ளிக்கல்வித் துறையில் 2025 -2026 ஆம் கல்வி ஆண்டில் அரசு மற்றும் அரசு உதவி பெறும் மேல்நிலைப் பள்ளிகளில் தற்போது 11 ஆம் வகுப்பு பயிலும் மாணவ, மாணவியர்கள் பயன்பெறும் வகையில் விலையில்லா மிதிவண்டிகள் வழங்கப்பட்டுள்ளது. இந்த கல்வியாண்டில் ஈரோடு மாவட்டம் முழுவதும் உள்ள பள்ளிகளில் பயிலும் 6,097 மாணவர்கள் மற்றும் 7,495 மாணவியர்கள் என மொத்தம் 13,592 மாணவ, மாணவியர்களுக்கு 13,592 எண்ணிக்கையிலான விலையில்லா மிதிவண்டிகள் ரூ.6.55 கோடி மதிப்பீட்டில் வழங்கப்பட்டுள்ளது.


இன்றைய தினம், அரசு மாதிரி பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் பயிலும் 269 மாணவியர்களுக்கும், கருங்கல்பாளையம் மாநகராட்சி பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் பயிலும் 227 மாணவியர்களுக்கும், கருங்கல்பாளையம் மாநகராட்சி ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் பயிலும் 147 மாணவர்களுக்கும், கொல்லம்பாளையம் ரயில்வே காலனி மேல்நிலைப்பள்ளியில் பயிலும்  91 மாணவர்கள், 35 மாணவியர்களுக்கும், கலைமகள் பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் பயிலும் 290 மாணவியர்களுக்கும், சி.எஸ்.ஐ. பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் பயிலும் 109 மாணவியர்களுக்கும் மிதிவண்டிகள் வழங்கப்பட்டுள்ளது. 


அதன்படி, இன்றைய தினம், 238 மாணவர்களுக்கு தலா ரூ.4,900 வீதம் ரூ.11.66 இலட்சம் மதிப்பிலும், 930 மாணவியர்களுக்கு  தலா ரூ.4,760 வீதம் ரூ.44.26 இலட்சம் மதிப்பிலும் என மொத்தம் 1168 மாணவ மாணவியர்களுக்கு மொத்தம் ரூ.55.92 இலட்சம் மதிப்பீட்டிலான மிதிவண்டிகள் வழங்கப்பட்டது.இந்நிகழ்ச்சியில் மாவட்ட ஆட்சித்தலைவர் ச.கந்தசாமி  மாநிலங்களவை உறுப்பினர் அந்தியூர் ப.செல்வராஜ், நாடாளுமன்ற உறுப்பினர் கே.இ.பிரகாஷ், ஈரோடு கிழக்கு சட்டமன்ற உறுப்பினர் வி.சி.சந்திரகுமார், ஈரோடு மாநகராட்சி மேயர் நாகரத்தினம் சுப்பிரமணியம், துணை மேயர் வெ.செல்வராஜ், மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் இ.மான்விழி, மாவட்ட பிற்படுத்தப்பட்ட சிறுபான்மையினர் துறை நலத்துறை அலுவலர் கோ.முரளி, அரசு மாதிரி பெண்கள் மேல்நிலைப்பள்ளி தலைமையாசிரியர் ஆனந்தி, உள்ளாட்சி அமைப்புகளின் பிரதிநிதிகள் உட்பட துறை சார்ந்த அலுவலர்கள் பலர் கலந்து கொண்டனர்.

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.