ஈரோடு மாவட்டம் கோபிசெட்டிபாளையம் நகராட்சி மற்றும் சத்தியமங்கலம் வட்டத்திற்கு உட்பட்ட பகுதிகளில் இன்று (09.11.2025) மாவட்ட தேர்தல் அலுவலர் / மாவட்ட ஆட்சித்தலைவர் ச.கந்தசாமி அவர்கள் வாக்காளர் சிறப்பு தீவிர திருத்தம் குறித்த ஆய்வு மேற்கொண்டுபொதுமக்களுக்கு விழிப்புணர்வு துண்டு பிரசுரங்களை வழங்கினார்.
ஈரோடு மாவட்டத்தில் உள்ள 2222 வாக்குச்சாவடிகளுக்கும் வாக்குச்சாவடி நிலை அலுவலர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். வாக்குச்சாவடி நிலை அலுவலர்களின் பணியினை மேற்பார்வை செய்ய ஒவ்வொரு மேற்பார்வையாளருக்கு 10 வாக்குச்சாவடிகள் வீதம் மொத்தம் 226 மேற்பார்வையாளர்கள் நியமனம் செய்யப்பட்டுள்ளனர். மேலும் வாக்குச்சாவடி நிலை அலுவலர்கள், மேற்பார்வையாளர்கள் மற்றும் அனைத்து அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சியினரால் இதுவரை நியமனம் செய்யப்பட்ட 6,820 வாக்குச்சாவடி நிலை முகவர்களுக்கு வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தம் 2026 தொடர்பாக பயிற்சி அளிக்கப்பட்டுள்ளது. வாக்காளர் சிறப்பு தீவிரம் குறித்த கணக்கெடுப்பு கடந்த 04.11.2025 தேதி தொடங்கப்பட்டு நடைபெற்று வருகிறது. கணக்கெடுப்பு காலத்தில் வாக்காளர்கள் எந்தவிதமான ஆவணங்களும் சமர்ப்பிக்க தேவையில்லை. கணக்கெடுப்பு படிவத்தை பூர்த்தி செய்து திரும்ப சமர்ப்பிக்காத வாக்காளர் பெயர் வரைவு வாக்காளர் பட்டியலில் இடம்பெறாது. கணக்கெடுப்பு பணிகள் முடிவுற்ற பின்பு வரைவு வாக்காளர் பட்டியலானது 09.12.2025 ம் தேதி வெளியிடப்படும்.
இன்றைய தினம், ஈரோடு மாவட்டம் கோபிசெட்டிபாளையம் நகராட்சி தினசரி மார்க்கெட் பகுதியில் மாவட்ட தேர்தல் அலுவலர் மற்றும் மாவட்ட ஆட்சித் தலைவர் அவர்களால் ஆய்வு மேற்கொண்டார்கள். இந்த ஆய்வின் போது மாவட்ட ஆட்சித் தலைவர் அவர்கள் தினசரி சந்தையர் சந்தையில் அப்பகுதியில் உள்ள பொது மக்களுக்கு தீவிர வாக்காளர் கணக்கெடுப்பு குறித்த துண்டு பிரசுரங்களை வழங்கினார். மேலும் தன்னாளவர்கள் வாக்காளர் சிறப்பு தீவிர திருத்தம் தொடர்பான விழிப்புணர்வு பதாகைகள் ஏந்திச்சென்ற படி பொது மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தியதோடு பொதுமக்களுக்கு வாக்காளர் சிறப்பு தீவிர திருத்தம் முக்கியத்துவம் குறித்து எடுத்துக் கூறி துண்டு பிரசுரங்களை வழங்கினார்கள்.
%20(1).jpg)
.jpeg)
%20(1).jpeg)
.jpeg)
%20(1).jpeg)
.jpeg)