ஈரோடு மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில், மாவட்ட ஆட்சித்தலைவர் ச.கந்தசாமி அவர்கள் இன்று (08.11.2025) “காபி வித் கலெக்டர்” நிகழ்ச்சியில் ஈரோடு மாவட்டத்தில் பணிபுரியும் செய்தியாளர்கள், ஒளிப்பதிவாளர்கள் மற்றும் புகைப்படக்காரர்கள் கலந்துரையாடினார்.
இன்றைய தினம் நடைபெற்ற காபி வித் கலெக்டர் நிகழ்ச்சியில், முகவர்களுக்கு வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தம் 2026 நடைபெற்று வருகிறது. தகுதியான எந்த ஒரு வாக்காளரும் விடுபடக்கூடாது என்ற நோக்கில் தீவிர வாக்காளர் கணக்கெடுப்பு பணி நடைபெற அனைத்து பொதுமக்களும் முழு ஒத்துழைப்பு நல்கிடும் வகையில் அனைவருக்கும் செய்திகள் வாயிலாக கொண்டு சென்று விழிப்புணர்வு ஏற்படுத்திட வேண்டும்.
தொடர்ந்து, ஈரோடு மாவட்டம் குறித்த சிறப்புகள் குறித்து புத்தகமாக எழுதிட முன்வர வேண்டும். மேலும் சுற்றுத்தலங்கள் அங்கு தேவையான வளர்ச்சித்திட்டப்பணிகள் இது போன்ற நிகழ்வுகளை வெளிகொண்டு வர வேண்டும். மேலும் சுற்றுத்தலங்களை மேம்படுத்த சுற்றுலாத்துறை மூலமாக நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. மேலும் பத்திரிக்கையில் சுட்டிக்காட்டப்படும் செய்திகளை சம்மந்தப்பட்ட துறைகளுக்கு அனுப்பி தீர்வு காணப்பட்டு வருகிறது. அரசின் திட்டங்களை பொதுமக்களுக்கு கொண்டு செல்லும் வகையில் திட்டங்கள் செயல்படுத்தும் துறைகள் மூலம் தேவையான விவரங்கள் வழங்க நடவடிக்கை எடுக்க பட்டுவருகிறது. பத்திரிக்கையாளர்கள் அல்லாமல் ஊடக ஒட்டுவில்லைகள் ஒட்டப்பட்டது கண்டறிய பட்டால் தகுந்த நடவடிக்கை எடுக்கப்படும். பத்திரிக்கையாளர்கள் நலவாரியத்தின் மூலம் பல்வேறு உதவித்தொகைகள் வழங்கப்பட்டு வருகிறது. உரிய ஆவணங்களுடன் விண்ணப்பித்து பத்திரிக்கையாளர்கள் பயன்பெற வேண்டும். மேலும் பத்திரிக்கையாளர்கள் அரசின் திட்டங்களை பொதுமக்களுக்கு கொண்டு செல்வதில் அரசுக்கும் பொதுமக்களுக்கும் பாலமாக இருக்கிறார்கள் என தெரிவித்தார். தொடர்ந்து மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் தாம் பணியாற்றிய அரசு பணிகள் தொடர்பாக அனுபவங்களை பத்திரிக்கையாளர்களுடன் பகிர்ந்து கொண்டு அவர்களுடைய குறைகளை கேட்டறிந்தார்.
இந்நிகழ்ச்சியில், செய்தி மக்கள் தொடர்பு அலுவலர் அ.சுகுமார், உதவி மக்கள் தொடர்பு அலுவலர் செ.கலைமாமணி, செய்தியாளர்கள் ஒளிப்பதிவாளர்கள் மற்றும் புகைப்படக்காரர்கள் உட்பட துறை சார்ந்த அலுவலர்கள் கலந்து கொண்டனர்.
%20(1).jpg)
.jpeg)
%20(1).jpeg)
.jpeg)
.jpeg)
.jpeg)
.jpeg)