Type Here to Get Search Results !

படிவத்தை பூர்த்தி செய்வதில் சந்தேகம் இருந்தால் தீர்த்துக்கொள்ள உதவி மைய எண்கள்...


இந்திய தேர்தல் ஆணையத்தால் 27.10.2025 அன்று வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தம் தொடர்பாக அறிவிப்பு வெளியிடப்பட்டது, ஈரோடு மாவட்டத்தில் உள்ள 8 சட்டமன்ற தொகுதிகளில் 04.11.2025 முதல், மொத்தமுள்ள 2222 வாக்குச்சாவடி நிலை அலுவலர்களால் இல்லந்தோறும் சென்று உரிய வழிகாட்டுதலுடன் கணக்கெடுப்பு படிவமானது மொத்தம் உள்ள 19,97,189 வாக்காளர்களில் நாளது வரை 19,64,228 (98%) படிவங்கள் வாக்காளர்களுக்கு வழங்கப்பட்டுள்ளது.

தற்போது கணக்கெடுப்பு படிவம் வழங்கப்பட்டுள்ள வாக்காளர்களிடம் வாக்குச்சாவடி நிலை அலுவலர்கள் வாக்காளர்களின் வீட்டிற்கு சென்று பூர்த்தி செய்யப்பட்ட 8,23,876 (42%) கணக்கெடுப்பு படிவங்களை திரும்ப பெற்று அதன் விவரங்கள் BLO (App) செயலியில் பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளது. 

வாக்காளர் சிறப்பு தீவிர திருத்தப் பணிகளானது 04.12.2025 அன்றுடன் முடிவடையவுள்ளதால், வரைவு வாக்காளர் பட்டியலில் தங்கள் பெயர்கள் விடுபடாமல் இருப்பதை உறுதி செய்ய வாக்காளர்கள் அனைவரும் தங்களுக்கு வழங்கப்பட்ட கணக்கெடுப்பு படிவங்களை பூர்த்தி செய்து BLO அல்லது BLA ஆகியோரிடம் சமர்ப்பிக்க கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். 

வாக்காளர் சிறப்பு தீவிர திருத்தம் 2026 தொடர்பாக ஈரோடு மாவட்ட ஆட்சியர் அலுவலகம் மற்றும் அனைத்து சட்டமன்ற தொகுதிகளின் உதவி வாக்காளர் பதிவு அலுவலர் அலுவலகத்திலும் உதவி மையம் (Help Desk) அமைக்கப்பட்டுள்ளது.  மேலும்,  கணக்கெடுப்பு படிவங்களை பூர்த்தி செய்வது தொடர்பாக வாக்குச்சாவடி அமைவிடங்களிலும் (Polling Station Location) வாக்காளர்களுக்கு உதவிடும் வகையிலும் கூடுதல் உதவி மையம் (Help Desk) அமைக்கப்பட்டு படிவங்கள் பெறப்பட்டுள்ளது. 

மேலும், ஈரோடு மாவட்ட ஆட்சியர் அலுவலகம் மற்றும் உதவி வாக்காளர் பதிவு அலுவலர் அலுவலகத்தில் அமைக்கப்பட்டுள்ள உதவி மையங்கள் மூலம் வரப்பெற்ற 47 புகார்கள் மற்றும் படிவங்கள் பூர்த்தி செய்வது தொடர்பான 155 சந்தேகங்கள் ஆகிவற்றிற்கு தீர்வு காணப்பட்டுள்ளது. மேலும், மாவட்ட இலவச தொடர்புமையம் (1950) மூலம் வரப்பெற்ற 232 புகார்களில் 163 புகார்களுக்கு  மாவட்ட இலவச தொடர்பு மையத்தின் மூலம் உடனடி தீர்வுகள் வழங்கப்பட்டுள்ளது.  மீதமுள்ள 69 புகார்களின் பேரில் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இவ்வாறாக வாக்காளர் சிறப்பு தீவிர திருத்தப் பணிகள் முனைப்பாக நடைபெற நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளது.

இப்பணி தொடர்பாக வாக்காளர் விழிப்புணர்வு பேரணி, துண்டு பிரசுரங்கள் வழங்குதல், பொதுமக்களை நேரில் சந்தித்து விழிப்புணர்வு ஏற்படுத்துதல் மேலும், சமூக வலைதளங்களில்  விழிப்புணர்வு ஏற்படுத்த போதிய அளவில் வீடியோக்கள் / புகைபடங்கள் வாயிலாக விளம்பரப்படுத்தப்பட்டுள்ளது, என கலெக்டர் தெரிவித்துள்ளார்.


மேலும், இப்படிவத்தை பூர்த்தி செய்வதில் சந்தேகங்கள் ஏதுமிருப்பின் இந்திய தேர்தல் ஆணையத்தால் வழங்கப்பட்டுள்ள கணக்கெடுப்பு படிவத்தில் தொடர்புடைய வாக்குச்சாவடி நிலை அலுவலர்களின் கைபேசி எண் அச்சிட்டு வழங்கப்பட்டுள்ளது.  அதில் தொடர்புகொண்டு அல்லது பின்வரும் உதவி மைய எண்களை தொடர்பு கொண்டு தங்களது சந்தேகங்களை தீர்த்துக்கொண்டு தங்களது படிவங்களை முழுமையாக பூர்த்தி செய்து சம்மந்தப்பட்ட BLO அல்லது BLA ஆகியோரிடம் சமர்ப்பிக்க கேட்டுக்கொள்ளப் படுகிறார்கள்.



Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.