அரசுப் பள்ளிகளில் 9 முதல் 12 ஆம் வகுப்பு வரை பயிலும் மாணவர்கள் STEM (அறிவியல், தொழில்நுட்பம், பொறியியல் கணிதம்) திட்டத்தின் கீழ் அறிவியல் அருங்காட்சியகங்கள். கோளரங்கங்கள், உயர்கல்வி நிறுவனங்கள் மற்றும் ஆராய்ச்சி மையங்களைப் பார்வையிட்டு அங்குள்ள நடைமுறைகளை தெரிந்து கொள்வதன் வாயிலாக மாணவர்களுக்கு அறிவியல் மீதுள்ள ஆர்வத்தை வளர்த்துக் கொள்ளவும், படைப்பாற்றல் சிந்தனைகளை தூண்டவும், அறிவியல் தொழில் நுட்பம் சார்ந்த கருவிகளை உருவாக்கவும் ஏதுவாக அமையும் என்ற நோக்கத்தில் கல்விச்சுற்றுலா அழைத்துச் செல்லப்படுகின்றனர்.
அதன்படி, ஈரோடு மாவட்டத்தில் 2025-26 ஆம் கல்வியாண்டில் அனைத்து அரசு உயர்நிலை மற்றும் மேல்நிலைப் பள்ளிகளில் பயிலும் 546 மாணவ, மாணவியர்கள் மாநிலத் திட்ட அலுவலகத்தால் நிர்ணயிக்கப்பட்ட அளவுகோல் மதிப்பெண் அடிப்படையில் தெரிவு செய்யப்பட்டு இன்றைய தினம் (08.12.2025) ஈரோடு மாவட்டத்தில் உள்ள பவானிசாகர் வேளாண்மை ஆராய்ச்சி நிலையம், மீன்வளத்துறை மையம், சித்தோடு அரசு பொறியியல் கல்லூரி, முத்தம்பாளையம் STEM பார்க், பெருந்துறை அரசு மருத்துவக்கல்லூரி ஆகிய இடங்களுக்கு கல்விக் சுற்றுலாவிற்கு அழைத்துச் செல்லப்பட்டனர். கல்விச் சுற்றுலா சென்ற அனைத்து மாணவ, மாணவியர்களுக்கு சிற்றுண்டி, மதிய உணவு மற்றும் குடிநீர் வழங்கப்பட்டது.
இதில் மாணவ, மாணவியர்கள் பவானிசாகர் வேளாண் ஆராய்ச்சி நிலையத்தில் புதிய பயிர் இரகங்கள், மேம்பட்ட சாகுபடி முறைகள், மண்புழு உரம் தயாரித்தல் குறித்தும், மீன்வளத்துறை மையத்தில் மீன்வளர்ப்பு நுட்பங்கள் குறித்தும் நேரடி அனுபவத்தை பெற்றனர். ஈரோடு STEM பார்க்கில் (அறிவியல் தொழில்நுட்பப் பூங்கா] அறிவியல் மற்றும் கணிதம் சார்ந்த கருத்துக்களை விளையட்டாகவும் நேரடி அனுபவமாகவும் கற்றுக் கொண்டனர். மேலும் இங்குள்ள டிஜிட்டல் கோளரங்களில் கோள்களின் இயக்கம் மற்றும் விண்மீன் திறள்கள் இயங்கும் விதத்தை முப்பரிமாண வீடியோவாக பார்த்து புரிந்து கொண்டணர். ஈரோடு மருத்துவக் கல்லூரியில் மருத்துவ உபகரணங்கள் உடல் உறுப்பு மாதிரிகளை பார்வையிட்டு தெரிந்து கொண்டனர். ஈரோடு அரசு பொறியியல் கல்லூரியில் உள்ள ஆய்வகங்களை பார்வையிட்டு பல்வேறு பொறியியல் கருவிகள் இயங்கும் விதம் மற்றும் அமைப்புகள் குறித்து தெரிந்து கொண்டனர். இந்த கல்விச் சுற்றுலா மாணவ, மாணவியர்களுக்கு மிகவும் பயனுள்ளதாக அமைந்தது.
இந்த கல்விச் சுற்றுலாவில் மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் மான்விழி, ஆசிரியர்கள் உட்பட துறை சார்ந்த அலுவலர்கள் கலந்து கொண்டனர்.
.jpg)
%20(1).jpeg)
.jpeg)