Type Here to Get Search Results !

தமிழ் வளர்ச்சித் துறையின் சார்பில் பேச்சுப் போட்டியில் வெற்றி பெற்ற மாணவ மாணவியர்களுக்கு பரிசு மற்றும் பாராட்டு சான்றிதழ்களை கலெக்டர் வழங்கினார்.


ஈரோடு மாவட்டம், மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில், இன்று (09.12.2025) மாவட்ட ஆட்சித்தலைவர்  ச.கந்தசாமி   அவர்கள் தமிழ் வளர்ச்சித் துறையின் சார்பில் அண்ணல் காந்தியடிகள் மற்றும் பண்டித ஜவகர்லால் நேரு ஆகியோரின் பிறந்தநாளையொட்டி பள்ளி கல்லுாரி மாணவ, மாணவியர்களுக்கிடையே நடைபெற்ற பேச்சுப் போட்டியில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசு மற்றும் பாராட்டு சான்றிதழ்களை வழங்கினார்.



தமிழ் வளர்ச்சித் துறையின் சார்பில் நாட்டிற்காகப் பாடுபட்ட தலைவர்களின் பிறந்த நாளன்று மாவட்ட அளவில் பள்ளி மற்றும் கல்லூரி மாணவர்களுக்கு ஆண்டுதோறும் பேச்சுப்போட்டிகள் நடத்திப் பரிசுகள் வழங்கப்பட்டு வருகிறது. அந்த வகையில் அண்ணல் காந்தியடிகள் (அக்டோபர் 2) மற்றும் (நவம்பர் 14) ஜவகர்லால் நேரு பிறந்தநாளையொட்டி 04.12.2025 மற்றும் 05.12.2025 ஆகிய இரண்டு நாட்களில் பள்ளி கல்லுாரி மாணவ, மாணவியர்க்கிடையே பேச்சுப் போட்டிகள் நடைபெற்றது.



இப்பேச்சுபோட்டிகள் பள்ளி மற்றும் கல்லூரி மாணவர்களுக்கு ஈரோடு, மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாக கூட்டரங்கில் நடைபெற்றது.



மேற்கண்ட தலைப்புகளில் பேச்சுப் போட்டிகள் நடத்தப்பட்டு, மாவட்ட ஆட்சித்தலைவர் ச.கந்தசாமி  அவர்கள் பள்ளி, கல்லூரி அளவில் நடைபெற்ற போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவ, மாணவியர்களுக்கு முதல் பரிசாக ரூ.5000/-, இரண்டாம் பரிசாக ரூ.3000/-, மூன்றாம் பரிசாக ரூ.2000/-, மற்றும் பள்ளி மாணவர்களுக்கென நடைபெற்ற பேச்சுப்போட்டியில் பங்கேற்ற மாணவ, மாணவியர்களுள் அரசுப் பள்ளி மாணவர்கள் இரண்டு பேரைத் தனியாகத் தெரிவு  செய்து ஒவ்வொருவருக்கும் சிறப்புப் பரிசுத்தொகையாக ரூ.2000/- வீதம் என மொத்தம் 16 மாணவ மாணவர்களுக்கு பரிசு மற்றும் பாராட்டு சான்றிதழ்களை வழங்கி வாழ்த்துக்களை தெரிவித்தார். 



இந்நிகழ்ச்சியில் தமிழ் வளர்ச்சி துறை துணை இயக்குநர்  ஜோதி, உட்பட துறை சார்ந்த அலுவலர்கள் கலந்து கொண்டனர்.





Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.