Type Here to Get Search Results !

ஈரோடு மாவட்ட ஆட்சியரக கூட்டரங்கில் மனித உரிமைகள் நாள் உறுமொழி ஏற்பு...


ஈரோடு மாவட்ட ஆட்சியரக கூட்டரங்கில் இன்று (10.12.2025) மனித உரிமைகள் நாள் உறுமொழி ஏற்பு நிகழ்ச்சி மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் (பொ) ராம்குமார் அவர்கள் தலைமையில் நடைபெற்றது.


இந்த நிகழ்ச்சியில் மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் (பொ) ராம்குமார் அவர்கள் தலைமையில் மனித உரிமைகள் நாள் உறுதிமொழியான,
"இந்திய அரசமைப்புச் சட்டத்திலும், இந்தியாவில் செயல்படுத்தத்தக்க பன்னாட்டு சட்டங்களில் வரையறுக்கப்பெற்ற மனித உரிமைகள் குறித்து உண்மையுடனும், பற்றுறுதியுடனும் நடந்து கொள்வேன் என்று உளமார உறுதி மொழிகிறேன். எவ்வித வேறுபாடுமின்றி, அனைவரின் மனித உரிமைகளை மதித்து நடப்பதுடன், மனித உரிமைகளை பாதுகாக்கும் வகையில் நான் என்னுடைய கடமைகளை ஆற்றுவேன். என்னுடைய எண்ணம், சொல் அல்லது செயல் மூலம் பிறருடைய மனித உரிமைகளை மீறுகிற எந்தவொரு அல்லது மறைமுகமாக மீற மாட்டேன். மனித உரிமைகள் மேம்படுவதற்கு நான் எப்போதும் ஆயத்தமாக இருப்பேன்” என்று அனைத்து துறை அரசு அலுவலர்கள் மற்றும் பணியாளர்கள் உறுதி மொழியினை ஏற்றுக்கொண்டனர்.



இந்நிகழ்ச்சியில், பொது மேலாளர் பாலசுப்ரமணியம், குற்றவியல் மேலாளர்  விஜயக்குமார், மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் (வேளாண்மை)  லோகநாதன் உட்பட அரசு அலுவலர்கள் மற்றும் பணியாளர்கள் ஆகியோர் கலந்து கொண்டனர்.



Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.