Type Here to Get Search Results !

திண்டல் வேளாளர் கல்லூரியில் இன்று மாபெரும் தனியார்துறை வேலைவாய்ப்பு முகாம் நடைபெற்றது.


ஈரோடு மாவட்ட நிர்வாகம், மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையம், தமிழ்நாடு மாநில / ஊரக நகர்ப்புற வாழ்வாதார இயக்கம் மற்றும் வேளாளர் பொறியியல் மற்றும் தொழில்நுட்பக் கல்லூரி இணைந்து நடத்திய மாபெரும் தனியார்துறை வேலைவாய்ப்பு முகாம் (06.12.2025) இன்று  ஈரோடு வேளாளர் கல்லூரியில் நடைபெற்றது.



முகாமில் தேர்வு பெற்ற வேலை நாடுனர்களுக்கு பணி நியமன ஆணைகளை மாண்புமிகு வீட்டுவசதி, மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைத்துறை அமைச்சர்  சு.முத்துசாமி அவர்கள் வழங்கினார்.

இம்முகாமில் மாண்புமிகு வீட்டுவசதி, மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைத்துறை அமைச்சர்  அவர்கள்  தெரிவித்ததாவது,

மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள், அரசானது பொதுமக்களுக்கு எவ்வாறெல்லாம் உதவ வேண்டும் என்பதற்கு எடுத்துக்காட்டாக விளங்குகிறார்கள். அனைத்து தரப்பு மக்களும் பயன்பெற வேண்டும். எல்லோருக்கும் எல்லாம் கிடைக்க வேண்டும் என்று பல்வேறு திட்டங்களை அறிவித்து சிறப்பாக செயல்படுத்தி வருகிறார்கள். குறிப்பாக முதலமைச்சரின் காலை உணவுத்திட்டம், உயர்கல்வியை ஊக்குவிக்கும் வகையில் புதுமைப்பெண், தமிழ்ப்புதல்வன் திட்டங்கள், நான் முதல்வன் திட்டம் போன்ற எண்ணற்ற திட்டங்களை செயல்படுத்தி வருகிறார்கள். அந்த வகையில் மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களின் வழிகாட்டுதலின்படி, தமிழ்நாடு மாநில ஊரக மற்றும் நகர்ப்புற வாழ்வாதார இயக்கம் மற்றும் வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டி மையம் சார்பில் மாபெரும் வேலைவாய்ப்பு முகாமானது 2021 ஆம் ஆண்டு முதல் துவங்கப்பட்டு சிறப்பாக நடைபெற்று வருகிறது. 


இன்றைய தினம் நடைபெறும் இந்த மாபெரும் தனியார்த்துறை வேலை வாய்ப்பு முகாமில் 229 முன்னணி நிறுவனங்கள் கலந்து கொண்டு காலிப்பணியிடங்களுக்கு நேர்காணல் நடத்தி தேர்வு செய்து வருகிறார்கள். முகாமில் 8 ஆம் வகுப்பு முதல் பட்டப்படிப்பு வரை / ஐ.டி.ஐ /டிப்ளமோ/நர்சிங்/பார்மஸி/பொறியியல் ஆகிய பிரிவுகளில் தேர்ச்சி பெற்ற சுமார் 6000 -க்கும் மேற்பட்ட வேலைநாடுனர்கள் கலந்து கொண்டு தங்கள் பெயரை பதிவு செய்து பல்வேறு நிறுவனங்கள் நடத்தும் நேர்காணலில் பங்கு பெற்று வருகிறார்கள். இதுவரை 700 வேலைநாடுனர்கள், தனியார் நிறுவனங்கள் மூலம் தேர்வு செய்யப்பட்டு அவர்களுக்கு பணிநியமன ஆணைகள் வழங்கப்பட்டுள்ளது. மாற்றுத்திறனாளிகளும் அதிக அளவில் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்கள். மேலும், இம்முகாமில் திறன் பயிற்சிக்கும் தேர்வு செய்யப்படவுள்ளனர். இவர்களுக்கு நேர்காணல் எதிர்கொள்வது, போட்டித் தேர்வுகளுக்கு தயாராகும் முறைகள் என பல்வேறு பயிற்சிகளும் வழங்கப்படவுள்ளது என தெரிவித்தார்.


தொடர்ந்து, மாண்புமிகு வீட்டுவசதி, மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைத்துறை அமைச்சர் அவர்கள் இன்றைய தினம் மாபெரும் தனியார்த்துறை வேலை வாய்ப்பு முகாமில் கலந்து கொண்டு தேர்வு பெற்ற வேலை நாடுனர்களுக்கு பணி நியமன ஆணைகளை வழங்கினார்.


இம்முகாமில், ஈரோடு மாவட்ட ஆட்சித்தலைவர்  ச.கந்தசாமி  மாநிலகங்களவை உறுப்பினர்  அந்தியூர் ப. செல்வராஜ், ஈரோடு கிழக்கு சட்டமன்ற உறுப்பினர்  வி.சி.சந்திரகுமார், ஈரோடு மாநகராட்சி துணை மேயர்  வே.செல்வராஜ், ஈரோடு மாநகராட்சி ஆணையாளர்  அர்பித் ஜெயின்,   உதவி ஆட்சியர் (பயிற்சி) செல்வி. காஞ்சன் சௌதரி,   ஈரோடு மாநகராட்சி 3-ம் மண்டல குழுத்தலைவர்  சசிகுமார், மண்டல இணை இயக்குநர் (வேலைவாய்ப்பு) ஆ.ஜோதிமணி, உதவி இயக்குநர் (மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையம்)  ராதிகா, திட்ட அலுவலர் (மகளிர் திட்டம்)  மலர்விழி, மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலர்  சாந்தி உட்பட துறை சார்ந்த அலுவலர்கள் கலந்து கொண்டனர்.



Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.