Type Here to Get Search Results !

ஈரோடு எக்ஸ்லண்ட் அரிமா சங்கம், ஈரோடு எல்லோ சன் சிட்டி அரிமா சங்கங்களின் பதவியேற்பு விழா...




ஈரோடு எக்ஸ்லண்ட் அரிமா சங்கம் மற்றும் ஈரோடு எல்லோ சன் சிட்டி அரிமா சங்கம் ஆகியவற்றின் 2026–2027 ஆம் ஆண்டுக்கான பதவியேற்பு விழா ஆகஸ்ட் 6-ஆம் தேதி மாலை 7 மணிக்கு ஈரோடு சென்ட்ரல் லயன்ஸ் ஹாலில் நடைபெறுகிறது.


ஈரோடு எக்ஸ்லண்ட் அரிமா சங்கத்தின் தலைவராக T.S.P. தாமோதரன், ஈரோடு எல்லோ சன் சிட்டி அரிமா சங்கத்தின் தலைவராக A. ரேணுகா தேவி பதவியேற்கின்றனர். தலைமை விருந்தினராக PID K. தனபாலன் (LCIF Area Leader) கலந்து கொண்டு ஆட்சிமன்ற குழுவினரை பதவியில் அமர்த்தி சிறப்புரையாற்றுகிறார்.


சிறப்பு விருந்தினர்களாக முன்னாள் மாவட்ட ஆளுநர் V. விஜயகுமார், அமைச்சரவை முதன்மை அதிகாரி Dr. L.M. ராமகிருஷ்ணன், முன்னாள் மாவட்ட ஆளுநர்கள் A.P. சுப்பிரமணியம், பூர்ணிமா டன்னா  மற்றும்  T. இளங்கோவன் ஆகியோர் பங்கேற்கின் றனர். அமைச்சரவை செயலர் S. நாகராஜ், அமைச்சரவை பொருளர் P. செங்கோட்டுவேலவன், அமைச்சரவை நிர்வாக அதிகாரி சிலிகேட் பாலா @ P. பாலமுருகன், மண்டலத்தலைவர் D. ஜெகநாதன், வட்டாரத்தலைவர் M. ரமேஷ்குமார், மாவட்ட கண்ணொளித்திட்ட தலைவர் குசும் பவ்சின்ஹா ஆகியோர் வாழ்த்துரை வழங்க உள்ளார்கள். அரிமா P. கணேசன், அரிமா S.N. மாதேஸ்வரன் ஆகியோர் நிகழ்ச்சி ஒருங்கிணைப்பாளர்களாக செயல்பட்டு சிறப்பிக்க உள்ளனர்.


மேலும், இரு Lions சங்கங்களின் 2026–2027 ஆம் ஆண்டுக்கான புதிய நிர்வாகிகள் மற்றும் உறுப்பினர்கள் பதவியேற்க உள்ளனர்.

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.