ஈரோடு மாவட்ட புதிய காவல்துறை எஸ். பி. -ஆக 17.03.2026 நேற்று செல்வி. கிரண் ஸ்ருதி பொறுப்பேற்றுள்ளார். 2018 ஆம் ஆண்டு I.P.S. பிரிவை சேர்ந்த இவர் ராணிப்பேட்டை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டாக பணியாற்றியுள்ளார். கடைசியாக, சென்னை தீவிரவாத தடுப்பு பிரிவு போலீஸ் சூப்பிரண்டாக பணியாற்றி வந்த இவர், தற்போது தேர்தல் ஆணையத்தின் உத்தரவின்படி ஈரோட்டின் S.P. -யாக பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளார்.
ஈரோடு மாவட்டம் சார்பாக நேற்று இவருக்கு, போலீஸ் கூடுதல் சூப்பிரண்டு தங்கவேல் தலைமையில் போலீஸ் அதிகாரிகள் வரவேற்பு அளித்தனர். ஈரோடு மாவட்டத்தின் எஸ் பி -யாக பதவி ஏற்றதை தொடர்ந்து அவர் கூறும் போது, கள நிலவரங்களை முழுமையாக அறிந்து கொண்டு நான் சிறப்பாக பணியாற்றுவேன் என தெரிவித்துள்ளார்.
அதன் பிறகு, இவர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மாவட்ட தேர்தல் அலுவலர் மற்றும் மாவட்ட ஆட்சித் தலைவர் கந்தசாமி அவர்களை நேரில் சந்தித்தார்.
.jpg)
%20123%20(1).jpg)
%201234%20(1).jpg)

.jpg)
%20(1).jpeg)
.jpeg)
%20(1).jpeg)
.jpg)