Type Here to Get Search Results !

பெண்களுக்கு தொழில்முனைவு வழிகாட்டல் - 6-வது பேட்ச் தையல் பயிற்சி நிறைவு...


2000ஆம் ஆண்டு முதல் செயல்பட்டு வரும் பசுமை உலகம் தன்னார்வத் தொண்டு நிறுவனம், கிராமப்புறங்கள் மற்றும் நகர்ப்புற குடிசைப்பகுதிகளில் வாழும் விளிம்புநிலை பெண்கள், நலிவடைந்த இளைஞர்கள் மற்றும் குழந்தைகளின் சமூகப் பாதுகாப்பு மற்றும் வாழ்வாதார மேம்பாட்டிற்காக பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி வருகிறது.

வறுமைக்கோட்டிற்குக் கீழ் வாழும் பெண்கள் மற்றும் வளரிளம் பருவத்தினருக்கு இலவச தொழிற்பயிற்சி மற்றும் திறன் மேம்பாட்டுப் பயிற்சிகள் வழங்கப்பட்டு வருகின்றன. கணினி அறிவு, Paramedical பயிற்சி, அழகுக்கலை, தையல், ஆடை வடிவமைப்பு, பொம்மை தயாரித்தல், பானைகளில் ஓவியம் வரைதல் மற்றும் சிறுதானிய சிற்றுண்டிகள் தயாரித்தல் உள்ளிட்ட பல்வேறு பயிற்சிகள் வழங்கப்படுகின்றன.


பயிற்சிகளை வெற்றிகரமாக நிறைவு செய்பவர்களுக்கு சான்றிதழ்களுடன் வேலைவாய்ப்பு உதவிகளும் வழங்கப்படுகின்றன. மேலும், முழுமையான சுயசார்பு கொண்ட பெண் தொழில்முனைவோராக உருவாக விரும்பும் பெண்களுக்கு தொழில்சார்ந்த வணிகப் பயிற்சிகளுடன் புதிய தொழிலைத் தொடங்குவதற்கான Seed Funding உதவியும் வழங்கப்படுகிறது.


இந்நிலையில், பெண் தொழில்முனைவோர் 6வது பேட்ச் தையல் பயிற்சியை நிறைவு செய்த பெண்களுக்கு சான்றிதழ்கள் வழங்கப்பட்டன. நிகழ்ச்சியில் பங்கேற்ற பயிற்சியாளர்களுக்கு சந்தை உத்திகள், வேலைவாய்ப்பு வாய்ப்புகள் மற்றும் தையல் மையம் தொடங்குவதற்கான திட்டமிடல் குறித்த வழிகாட்டுதல்களும் வழங்கப்பட்டன.


நிகழ்ச்சிக்கு பசுமை உலகம் தன்னார்வத் தொண்டு நிறுவனத்தின் நிறுவனர் G. மனமோகன் தலைமை தாங்கி, தொழில்முனைவோராக உருவாகும் பெண்களை ஊக்குவிக்கும் வகையில் சிறப்புரையாற்றினார். மூத்த திட்ட அலுவலர் D. ஜெயராஜ் தலைமையில் நிதிசார் அறிவுப் பயிற்சி அளிக்கப்பட்டு, பெண்களுக்குத் தேவையான நிதி மேலாண்மை திறன்கள் குறித்து விளக்கப்பட்டது.

நிகழ்ச்சிக்கான அனைத்து ஏற்பாடுகளையும் அமைப்பின் கள ஒருங்கிணைப்பாளர்களான கௌசல்யா மற்றும் துர்கா ஆகியோர் ஒருங்கிணைத்தனர்.




Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.