ஈரோடு உதயம் நகர் தவமையம் சார்பில் மனைவி நல வேட்பு நாள் விழா நிகழ்வு மற்றும் குங்குமச் சிமிழ் மலர், கனி காந்தப் பரிமாற்ற விழா 06.09.2026 ஞாயிற்றுக்கிழமை மாலை ரங்கம்பாளையம், உதயம் நகர் மனவளக்கலை மன்ற தவ மையத்தில் நடைபெற்றது.
துணைப்பேராசிரியை, உதயம் நகர் தவமைய பொறுப்பாசிரியர் திருமதி. கலைவாணி அவர்கள் இறை வணக்கம் நிகழ்வை வழங்கினார்,திருமதி. A.கவிதா சுரேஷ் அவர்கள் குரு வணக்கம் நிகழ்வை வழங்கினார்.பேராசிரியர். மௌனம். M.கோவிந்தராஜ் அவர்கள் தவம் நிகழ்வை வழங்கினார்.ஈரோடு உதயம் நகர் பொறுப்பாளர் P.கௌதமன் அவர்கள் வரவேற்புரையாற்றினார்.
சிறப்பு விருந்தினராக ஆத்தூர் மனவளக்கலை மன்ற அறக்கட்டனை துணைத்தலைவர், மனநல ஆலோசகர் பேராசிரியர் திருமதி N.சத்யபிரியா அவர்கள் கலந்து கொண்டு “சிறப்புணர்ந்த பெண் மதிப்பு” என்ற தலைப்பில் விழா பேருரையாற்றினார்.
இதை தொடர்ந்து, சிறப்பு தம்பதியர்களாக தேர்ந்தெடுக்கப்பட்ட, ஈரோடு உதயம் நகர் தவமைய செயலாளர் அருள்நிதி துளசிமணி, அருள்நிதி து.நாகரத்தினம், ஈரோடு உதயம் நகர் தவமைய ஆலோசகர், ஈரோடு மனவளக்கலை மண்டல துணைத்தலைவர் பேராசிரியர் K.ரவிச்சந்திரன், ஈரோடு மனவளக்கலை அறக்கட்டளை துணைப்பேராசிரியர் V.மோகனராணி, பேராசிரியர் T. தமிழரசி, அருள்நிதி V. துரைசாமி,ஈரோடு கலை மற்றும் அறிவியல் கல்லூரி முதல்வர் Dr.R.சங்கரசுப்பிரமணியன், திருமதி P. ஜெயலட்சுமி ஆகியோர்களுக்கு மன்ற பொறுப்பாளர்களான P.ஸ்ரீதர், S.முரளிதரன், D..அமுதா தேவகுமார், VRKK.கோபாலகிருஷ்ணன் ஆகியோரால் நினைவுப் பரிசுகள் வழங்கப்பட்டது.
இந்நிகழ்வில், ஈரோடு உதயம் நகர் தவமைய தலைவர், துணை பேராசிரியர் T.தேவகுமார் அவர்கள் நன்றியுரையாற்றினார். தொடர்ந்து, ஈரோடு உதயம் நகர் தவமைய பொறுப்பாளர் S.ஸ்ரீனிவாசன் அவர்கள் உலக நல வாழ்த்து பாடினார். ஈரோடு உதயம் நகர் தலைமை பொறுப்பாளர் பேராசிரியர் உமாமகேஸ் அவர்கள் விழாவினை சிறப்பாக தொகுத்து வழங்கினார்.
சுமார் 150 அன்பர்கள் கலந்து கொண்ட இந்நிகழ்ச்சியில், சிறப்பான இரவு உணவு விருந்துடன் நிறைவு பெற்றது.
%20(2).jpg)
.jpeg)
.jpg)
.jpg)
%20(1).jpeg)
.jpg)
.jpg)
.jpg)
.jpg)

.jpg)
.jpg)