Type Here to Get Search Results !

ஈரோடு மின் பகிர்மான வட்ட அலுவலகங்களின் தொலைபேசி எண்கள் மாற்றம்....

 


தமிழ்நாடு மின்பகிர்மான கழகம், ஈரோடு மின் பகிர்மான வட்டத்தில் அனைத்து அலுவலர்களுக்கும் ஏற்கனவே இருந்த தொலைபேசி எண்கள் நிர்வாக காரணங்களால் மாற்றப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளது.

இதன்படி, இனிவரும் காலங்களில் மின்நுகர்வோர் புதிய தொலைபேசி எண்களை பயன்படுத்திக் கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.

ஈரோடு மின் பகிர்மான வட்டத்தின் மின்அகம் அழைப்பு மையத்திற்கு 9498794987 என்ற எண்ணும், ஈரோடு நகரக் கோட்டத்தின் உதவி மின் பொறியாளர்கள் மற்றும் இளநிலை மின் பொறியாளர்களுக்கான புதிய எண்களும் அறிவிக்கப்பட்டுள்ளன.

மேலும், தெற்கு கோட்டம், மேற்கு ஈரோடு, முத்தம்பாளையம், இடையன்காட்டு வலசு, திண்டல், நசியனூர், நாராயணவலசு, மேட்டுக்கடை உள்ளிட்ட பல்வேறு பகுதிகளுக்கான அலுவலகங்களின் புதிய தொலைபேசி எண்கள் வெளியிடப்பட்டுள்ளன.

தெற்கு கோட்டம், மூலப்பாளையம், முள்ளாம்பரப்பு, கஸ்பாபேட்டை, எம்மாத்தூர், மொடக்குறிச்சி, எல்லக்கடை, அவல்பூந்துறை உள்ளிட்ட பகுதிகளுக்கும், பெருந்துறை கோட்டத்திற்குட்பட்ட பல்வேறு பகுதிகளுக்கும் புதிய தொலைபேசி எண்கள் அறிவிக்கப்பட்டுள்ளன.

மின்நுகர்வோர் தங்களது தேவைகளுக்காக இனிமேல் அறிவிக்கப்பட்டுள்ள புதிய தொலைபேசி எண்களை பயன்படுத்திக் கொள்ளுமாறு தமிழ்நாடு மின்சார வாரியம் தெரிவித்துள்ளது. 

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.